அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டேன்

அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் பத­விக்­கா­லம் செப்­டம்­பர் 13ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது. அதற்­குள் புதிய அதி­பர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும். அதற்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்­டி­யி­டப்­போ­வ­து இல்லை என்று திரு­வாட்டி ஹலிமா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று தமது ஃபேஸ்புக்­கில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டார். அதில், “இன்­னும் சில மாதங்­களில் அதி­பர் தேர்­தல் நடத்­தப்­பட உள்­ளது. அந்­தத் தேர்­த­லில் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று முடிவு செய்­துள்­ளேன்.

“மிக­வும் கவ­னத்­து­டன் பரி­சீ­லித்த பின்­னரே இந்த முடிவை எடுத்­துள்­ளேன். கடந்த ஆறாண்டு கால­மாக சிங்­கப்­பூரின் எட்­டா­வது அதி­ப­ரா­கச் சேவை­யாற்ற எனக்­குக் கிடைத்த வாய்ப்­பைப் பெரும் பாக்­கி­ய­மா­க­வும் கௌர­வ­மா­க­வும் கரு­து­கி­றேன்.

“அதி­ப­ரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் ஊக்­கம் நிறைந்­த­தா­க­வும் எளி­மை­யைக் கடைப்­பி­டிக்­கக்­கூ­டி­ய­தா­க­வும் அமைந்­தது.

“அதி­பர் பதவி என்­பது மிகப்­பெ­ரிய பொறுப்பு என்­பதை 2017ஆம் ஆண்டு பதவி ஏற்­ற­போது உணர்ந்­தேன். அத்­த­கைய பொறுப்­பு­களை நிறை­வேற்ற என்­னால் இயன்ற அள­வுக்கு முயன்­றேன்.

“இரக்­க­மும் அர­வ­ணைப்­பும் நிறைந்த சமூ­கத்தை உரு­வாக்க உத­வு­வது எனது நோக்கமாக இருந்­தது. எனது நோக்கத்தைப் பகிர்ந்து ஏரா­ள­மான சிங்­கப்­பூரர்­கள் எனக்கு ஆத­ரவு வழங்கி என்­னு­டனே பய­ணம் செய்­தார்­கள் என்­ப­தில் எனக்கு மகிழ்ச்சி.

“நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­றி­னோம். நமது சமூ­கங்­க­ளின் குரலை உரக்க ஒலித்­தோம். தேவை­யுள்­ளோ­ரின் வாழ்க்­கையை கைதூக்­கி­விட்­டோம். குறிப்­பாக, நம்­மி­டையே உள்ள வச­தி­கு­றைந்­தோ­ருக்­கும் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­ய­வ­ருக்­கும் உத­வி­னோம்.

“கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் ஒன்­றி­ணைந்து ஒரு­வ­ருக்கு ஒரு­வர் ஆத­ர­வாக இருந்த சிங்­கப்­பூ­ரர்­களை நினைத்து நான் மிக­வும் பெரு­மைப்­ப­டு­கி­றேன். அவ்­வாறு ஒரு­வ­ரோடு ஒரு­வர் இணைந்து பணி­யாற்­ற­ய­தன் விளை­வாக நமது நாடு இப்­போ­தி­ருக்­கும் நிலைக்­குப் பாது­காப்­பா­கத் திரும்­ப­ மு­டிந்­தது.

“அனைத்­து­லக ரீதி­யில் இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து பல வெளி­நாட்­டுத் தலை­வர்­க­ளைச் சந்­தித்­தேன். அவர்­கள் நமது சிறந்த ஆட்சிமுறையைப் புகழ்ந்­த­தோடு சிங்­கப்­பூர் மீது மதிப்­பை­யும் வெளிப்­ப­டுத்­தி­னார்­கள்.

குறிப்­பாக, வலு­வான சமூக ஒற்­று­மை­யை­யும் நமது பல இன, பல சமய சமூ­கத்­தை­யும் அவர்­கள் பாராட்­டி­னார்­கள். அதி­பர் பொறுப்பு என்­பது சிங்­கப்­பூ­ரின் ஜன­நா­ய­கத்­தில் ஆக உயர்ந்த, முக்­கிய இடத்தை வகிக்­கிறது. மக்­கள் பகிர்ந்­து­கொண்ட நன்­மதிப்­பை­யும் விருப்­பங்­க­ளை­யும் உரு­வ­கப்­ப­டுத்தி ஒற்­றுமை தேச­மாக நாட்டை உரு­வாக்­கக்­கூடிய பொறுப்பு அது.

“அதி­ப­ரின் ஒருங்­கி­ணைக்­கும் பொறுப்பு என்­பது சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்­தைக் காக்­கும் பொருட்டு அர­சாங்­கத்­து­டன் இணைந்து அணுக்­க­மா­கப் பணி­யாற்­றக்­கூ­டி­யது. நாட்­டின் வெற்­றிக்கு முக்­கி­ய­மான ஒன்­றாக அது எப்­போ­தும் விளங்கி வரு­கிறது. அத்­து­டன், நிச்­ச­ய­மற்ற, குழப்­ப­மான உல­கில் நமது பாதையை வகுக்­கும் நேரத்­தில் அப்­பொ­றுப்பு இன்­னும் முக்­கியத்­து­வம் வாய்ந்­த­தாக இருக்­கும்.

“சிங்­கப்­பூ­ரின் அதி­பர் என்ற முறை­யில் இனம், மொழி அல்­லது சமூ­க­நிலை என்ற பேத­மின்றி எல்லா சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சேவை­யாற்­றக்­கூ­டிய வாய்ப்­புப் பெற்­றது எனக்­குக் கிடைத்த பெரும்பேறு.

“எனது பத­விக்­கா­லத்­தில் நான் பெற்ற அனு­ப­வங்­கள் என் மன­தில் எப்­போ­தும் நிழ­லா­டும். நமது சமூ­கத்­திற்­கும் நாட்­டிற்­கும் என்­னால் இயன்ற காலம் வரை தொடர்ந்து பங்­க­ளிக்க இந்த அனு­ப­வங்­கள் எனக்கு ஊக்­க­ம­ளிக்­கும். பத­விக்­கா­லம் முழு­வ­தும் எனக்கு இடை­வி­டாத ஆத­ரவு அளித்த எனது குடும்­பத்­துக்­கும் எனது கண­வ­ருக்­கும் இந்த நேரத்­தில் நன்­றி­சொல்ல கட­மைப்­பட்டு இருக்­கி­றேன்,” என்று திரு­வாட்டி ஹலிமா தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

திருவாட்டி ஹலிமா கடந்த 2017 செப்டம்பர் 14ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றார். சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் அவர் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!