லாரன்ஸ் வோங் புகழாரம்

லாரன்ஸ் வோங் புகழாரம்

1 mins read

அதிபர் ஹலிமாவின் அறிவிப்பு குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார். திருவாட்டி ஹலிமா தமது பதவிக்காலத்தில் திடமான கடப்பாட்டுடனும் பரிவுடனும் இரக்கத்துடனும் சேவையாற்றியதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

"எளிய மக்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வர்கள் மீது அதிபர் ஹலிமா சிறப்புக் கவனம் செலுத்தி னார். கொவிட்-19 கொள்ளைநோய் அதிகம் பரவிய காலத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, சிங்கப்பூர் மீண்டும் வலுவுடன் உருவெடுக்க கடந்த கால நிதி சேமிப்பைப் பயன்படுத்த அதிபர் ஒப்புதல் வழங்கியது முக்கியமானது," என்று திரு வோங் தெரிவித்து உள்ளார்.