மணிப்பூரில் ஓயாத வன்முறை; அமைச்சர் அமித் ஷா விரைந்தார்

1 mins read
fcf1dae0-9eef-4fd2-b4ba-a501a8525bf2
-

மணிப்­பூ­ரில் குக்கி, நாகா இன மக்­கள் பழங்­கு­டி­யி­ன­ராக உள்­ள­னர். மைத்­தேயி இன மக்­கள், தங்­களை பழங்­குடி இனப் பட்­டி­ய­லில் சேர்க்க வலி­யு­றுத்­து­கின்­ற­னர். இதற்கு ஆத­ர­வாக மணிப்­பூர் உயர்­நீ­தி­மன்­ற­மும் தீர்ப்­ப­ளித்­தது. ஆனால் குக்கி, நாகா இன மக்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­தால் வன்­முறை வெடித்­தது.

இம்­மா­தத்­ தொடக்­கத்­தில் நடை­பெற்ற கல­வ­ரத்­தில் 70க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர்; 200க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

மூன்று வாரங்­கள் ஆன நிலை­யில் வன்­மு­றை­யும் பதற்­ற­மும் மணிப்­பூ­ரில் நீடிக்­கிறது. ஞாயிற்­றுக்கிழமை மீண்­டும் பெரி­தாக வெடித்த வன்­மு­றை­யில் பொது­மக்­களில் அறு­வ­ரும் காவல்­து­றை­யி­ன­ரில் இரு­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னர்.

ராணு­வத் தள­பதி ஜென­ரல் மனோஜ் பாண்டே கடந்த சனிக்­கி­ழமை முதல் முகா­மிட்டு இருக்­கும் நிலை­யி­லும் வன்­முறை ஓய­வில்லை.

அத­னைத் தொடர்ந்து மத்­திய உள்­துறை இணை அமைச்­சர் நித்­யா­னந்த் ராய் சென்­ற­டைந்த நிலை­யில் உள்­துறை அமைச்­சர் அமித் ஷாவும் நேற்று மணிப்­பூர் விரைந்­தார்.

இதற்­கி­டையே, கடந்த 4 நாள்­களில் 40 தீவி­ர­வா­தி­களை பாது­காப்­புப் படை­யி­னர் கொன்­று­விட்­ட­தாக மணிப்­பூர் முதல்­வர் பைரோன் சிங் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.