மாரியம்மன் கோயில் நகைகளை அடகு வைத்த தலைமை அர்ச்சகருக்கு 6 ஆண்டு சிறை

ஐந்தாண்டு காலம் பலமுறை அடகு வைத்து $2.3 மி. பெற்றார்

சவுத் பிரிட்ஜ் ரோடு மாரி­யம்­மன் கோயில் நகை­களை அட­கு­வைத்த குற்­றத்­திற்­காக கோயி­லின் முன்­னாள் தலைமை அர்ச்­ச­க­ருக்கு நேற்று ஆறாண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கந்­த­சாமி சேனா­பதி, 39, (படம்) எனப்­படும் அவர், கிட்­டத்­தட்ட $2.3 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகைக்கு கோயில் நகை­களை மீண்­டும் மீண்­டும் அடகு வைத்­தது கணக்­குத் தணிக்கை நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

கையா­டல் செய்து நய­வஞ்­ச­கமாக நடந்­து­கொண்­ட­தன் மூலம் நம்­பிக்கை மோசடி செய்த இரு குற்­றச்­சாட்­டு­களை நீதி­மன்­றத்­தில் சேனா­பதி ஒப்­புக்­கொண்­டார். இதர ஆறு குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிப்­பின்­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

இந்­திய நாட்­ட­வ­ரான சேனா­பதி, ஸ்ரீமாரி­யம்­மன் கோயில் அர்ச்­ச­க­ராக 2013 டிசம்­பர் மாதம் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தால் சேவை­யில் அமர்த்­தப்­பட்­டார். அவர் தமது தலைமை அர்ச்­ச­கர் பொறுப்­பில் 2020 மார்ச் 30ஆம் தேதி வரை இருந்­தார்.

குற்­றம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட தால் அந்­தத் தேதி­யில் அவர் தமது பொறுப்­பு­களில் இருந்து வில­கி­னார்.

தொடக்­கத்­தில் தலைமை அர்ச்­ச­கருக்கு அடுத்­த­நி­லை­யில் இருந்த சேனா­பதி, தலைமை அர்ச்­ச­கர் ஓய்­வு­பெற்­ற­தும் 2018 ஜூலை­யில் அந்­தப் பொறுப்­புக்கு நிய­மிக்­கப்­பட்­டார்.

இருப்­பி­னும் 2014ஆம் ஆண்­டி­லேயே கோயி­லின் கரு­வ­றை­யில் உள்ள பாது­காப்­புப் பெட்­ட­கத்­தின் ரக­சிய எண்­ணும் அதற்­கான சாவி­களும் நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு இருந்­தது.

அந்­தப் பெட்­ட­கத்­தில் கோயி­லுக்­குச் சொந்­த­மான 255 தங்க நகை­கள் இருந்­தன. அவற்­றின் புத்­தக மதிப்பு கிட்­டத்­தட்ட S$1.1 மில்­லி­யன்.

சிறப்புப் பூசை­கள் மற்­றும் விழாக்­கா­லங்­க­ளின்­போது விக்­கி­ரங்­க­ளுக்கு அணி­விக்­கப்­படும் நகை­களை மீண்­டும் பத்­தி­ர­மாக பெட்­ட­கத்­தில் சேர்க்கவேண்­டிய பொறுப்பு அவ­ரு­டை­ய­தாக இருந்­தது. அந்­தப் பெட்­ட­கத்­தைக் கையா­ளக்கூடிய ஒரே நப­ராக சேனா­பதி இருந்­தார்.

2016ஆம் ஆண்டு முதல் கோயில் நகை­களை அடகு வைப்­ப­தும் பின்­னர் மேலும் சில நகை­களை அடகு வைத்து முத­லில் வைத்த நகை­க­ளைத் திருப்­பு­வ­து­மாக இருந்­தார் அவர்.

2016ஆம் ஆண்­டில் மட்­டும் 172 தடவை அவ்­வாறு செய்­தார். 66 நகை­களை அவர் அடகு வைப்­ப­தும் அவற்றை மீட்­ப­து­மாக இருந்­தார்.

அவ­ரது இந்­தச் செயலை வேறு யாரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. எனவே, கோயில் நகை­களை அடகு வைப்­பதை 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்­தார். அடகு வைத்த நகை­களை கோயி­லில் கணக்­குத் தணிக்கை நடை­பெ­று­வ­தற்கு சில நாள்­கள் முன்­ன­தாக திரும்­பக் கொண்டு வந்து அவர் வைத்­து­வி­டு­வார்.

தணிக்கை முடிந்­த­தும் மீண்­டும் அவற்றை அடகு வைப்­பார். 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்­டு­வரை S$2,328,760 அளவுக்கு நகை­களை அடகு வைத்­தார்.

தமது வங்­கிக் கணக்­கில் வர­வு­வைக்­கப்­பட்ட தொகை­யில் கிட்­டத்­தட்ட S$141,000 மதிப்­புள்ள பணத்தை இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­னார்.

2020 மார்ச்­சில் கோயி­லில் கணக்­குத் தணிக்­கைத் திட்­ட­மிடப்­பட்­டது. ஆயி­னும், கொவிட்-19 கார­ண­மாக அது தள்­ளிப்­போ­டப்­பட்டு ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரை நடத்த முடிவு செய்­யப்­பட்­டது.

அதற்கு முன்­ன­தாக, 2020 ஜூனில் நகை­கள் வைக்­கப்­பட்­டுள்ள பெட்­ட­கத்­தின் சாவி தம்­மி­டம் இல்லை என்­றும் இந்­தியா சென்­ற­போது சாவியை அங்­கேயே வைத்­து­விட்டு வந்­த­தைப்­போ­லத் தெரி­வ­தா­க­வும் கோயில் நிதிக் குழு உறுப்­பி­னர் ஒரு­வ­ரி­டம் சேனா­பதி கூறி­னார்.

ஆனா­லும், திட்­ட­மிட்ட தேதி­களில் தணிக்கை நடத்­தப்­படும் என்­றும் பெட்­ட­கம் தணிக்­கைக்­காக வலுக்­கட்­டா­ய­மா­கத் திறக்­கப்­பட வேண்டி இருக்கும் என்றும் அந்த உறுப்­பி­னர் பதி­ல­ளித்­தார்.

நிலைமை சிக்­க­லா­வதை உணர்ந்த சேனா­பதி, நகை­களை தாம் அடகு வைத்­தி­ருப்­ப­தாக 2020 ஜூலை 2ஆம் தேதி தெரி­வித்­தார். அத­னைத் தொடர்ந்து 2020 ஜூலை 29ஆம் தேதி அவர்­மீது காவல்­து­றை­யில் புகார் செய்­யப்­பட்­டது.

நீதி­மன்­றத்­தில் சேனா­ப­தி­யைப் பிர­தி­நி­தித்து வழக்கறிஞர் மோகன்­தாஸ் நாயுடு வாதா­டி­னார். நகை­களை சேனா­பதி அடகு வைத்­த­தன் நோக்­கம் என்ன என்று நீதி­பதி ஷைஃபுதின் சரு­வான் வின­வி­னார்.

அதற்­குப் பதி­ல­ளித்த வழக்­க­றி­ஞர், இந்­தி­யா­வில் உள்ள தமது நண்­பர்­க­ளுக்கு, குறிப்­பாக நண்­பர் ஒரு­வ­ரின் தாயா­ரின் புற்­று­நோய் சிகிச்­சைக்கு உதவ பணம் தேவைப்­பட்­ட­தால் சேனா­பதி அவ்­வாறு செய்­யத் தொடங்கியதாக வும் கூறி­னார். இவ்­வாறு தொடங்­கிய அவ­ரது செய்கை பின்­னா­ளில் கையை­மீறிப்போன­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு நம்­பிக்கை மோசடிக் குற்­றத்­திற்­கும் சேனா­பதிக்கு 15 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்க சட்­டத்­தில் இட­முண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!