தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் புதிதாக 7,000 வீடுகள் விற்பனை

2 mins read
46418524-024d-48e2-bf4d-c7f5838e795a
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் பல்­வேறு பேட்­டை­களில் கிட்­டத்­தட்ட 7,000 வீடு­களை நேற்று விற்­ப­னைக்கு விட்­டது. இவற்­றில் 1,500 வீடு­கள் எஞ்­சிய வீடு­க­ளின் விற்­ப­னைப் பட்­டி­ய­லில் உள்­ளவை. ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்கு உட்­பட்ட 5,495 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடு­களும் விற்­ப­னைக்கு வந்­த­வற்­றுள் அடங்­கும். முதிர்ச்­சி­ய­டைந்த பேட்­டை­க­ளான பிடோக், காலாங்/வாம்போ மற்­றும் சிராங்­கூன் வட்­டா­ரங்­களில் அமல்­ப­டுத்­தப்­பட்ட பிடிஓ திட்­டங்­கள் அவை.

இதர இரண்டு திட்­டங்­கள் முதிர்ச்­சி­ய­டை­யாத தெங்கா வீட­மைப்­புப் பேட்­டைக்­கு­ரி­யவை. விற்­ப­னைக்கு விடப்­படும் பிடிஓ வீடு­களில் 90 விழுக்­காட்­டுக்­கான காத்­தி­ருப்புக் காலம் நான்­காண்­டு­க­ளுக்­கும் குறைவு.

அதே­நே­ரம் ஐந்து பிடிஓ திட்­டங்­களில் நான்­கிற்­கான காத்­தி­ருப்புக் காலம் மூன்­றாண்டு ஒரு மாதம் முதல் மூன்­றாண்டு எட்டு மாதம் வரை இருக்­கும் என்று வீவக நேற்று தெரி­வித்­தது.

விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்ள வட்­டா­ரங்­களில் பிடோக் மற்­றும் சிராங்­கூன் வீடு­க­ளுக்கு வலு­வான தேவை இருக்­கும் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக அது கூறி­யது.

பிடோக்­கில் இதற்கு முன்­னர் 2016 நவம்­ப­ரில் பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­பட்­டன. அதே­போல சிராங்­கூ­னில் 2014 ஜன­வ­ரி­யில் மூத்­தோ­ருக்­கான 150 ஸ்டூ­டியோ வீடு­க­ளுக்­கான விற்­பனை நடை­பெற்­றது.

தற்­போது விற்­ப­னைக்கு வந்­துள்­ள­வற்­றில் 1,640 வீடு­கள் பிடோக் சவுத் பிளா­சம் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளவை. தானா மேரா எம்­ஆர்டி நிலை­யத்­தின் அரு­கி­லுள்ள தளத்­தில் அந்த வீடு­கள் இடம்­பெ­றும். பிடோக் சவுத் ரோடு மற்­றும் பிடோக் சவுத் அவென்யூ 3 ஆகிய பகு­தி­க­ளால் சூழப்­பட்ட பகுதி அது.

புதிய வீடு­க­ளுக்­கான விலை விவ­ரங்­க­ளை­யும் கழ­கம் வெளி­யிட்­டுள்­ளது. பிடோக் சவுத் பிளா­சம் ஐந்­தறை வீடு­க­ளுக்­கான விலை $588,000 முதல் $737,000 வரை­யி­லும் நான்­கறை வீடு­க­ளின் விலை $488,000 முதல் $587,000 வரை­யி­லும் இருக்­கும். அதே­போல, மூவறை வீடு­க­ளின் விலை $320,000க்கும் $396,000க்கும் இடைப்­பட்டு இருக்­கும் என்­றது கழ­கம்.

விற்­ப­னைக்கு விடப்­பட்ட வீடு­களில் சிராங்­கூன் நார்க் விஸ்­தா­வில் உள்ள 330 வீடு­களும் அடங்­கும். சிராங்­கூன் அவென்யூ 1க்கும் இயோ சூ காங் ரோட்­டுக்­கும் இடைப்­பட்ட தளத்­தில் அந்த வீடு­கள் அமை­யும். இங்­குள்ள ஐந்­தறை வீடு­க­ளின் விலை $558,000க்கும் $658,000க்கும் இடைப்­பட்­ட­தாக இருக்­கும். நான்­கறை வீடு­க­ளின் விலை $397,000 முதல் $496,000 வரை இருக்­கும்.

இந்த இரு பேட்­டை­களில் விற்­ப­னைக்கு விடப்­பட்ட ஐந்­தறை வீடு­கள் இம்­மா­தம் விற்­ப­னைக்கு விடப்­பட்ட மொத்த ஐந்­தறை வீடு­களில் 40 விழுக்­காட்­டுக்­கும் மேல்.

ஃபேரர் பார்க் அரி­னா­வில் 569 வீடு­கள் விற்­ப­னைக்கு விடப்­ப­டு­கின்­றன. இவற்­றில் நான்­கறை மற்­றும் மூவறை வீடு­கள் மட்­டும் இருக்­கும். இவற்­றின் விலை $362,000க்கும் $642,000க்கும் இடைப்­பட்­ட­தாக இருக்­கும்.

இந்த வீடு­க­ளுக்­கான திட்­டம் முதன்மை வட்­டார பொது வீட­மைப்பு முறை­யின்­கீழ் அமைந்­துள்­ளது. இந்த வீடு­க­ளுக்­கான குறைந்­த­பட்ச குடி­யி­ருப்பு காலம் 10 ஆண்­டு­கள்.