டெல்லி சிறுமி கொடூரக் கொலை; 22 முறை கத்தியால் குத்தி, பாறாங்கல்லால் தாக்கிய இளையர்

டெல்லி சிறுமி கொடூரக் கொலை; 22 முறை கத்தியால் குத்தி, பாறாங்கல்லால் தாக்கிய இளையர்

2 mins read
f5c32024-56e3-4bf8-906d-b561552d4344
-

வட­மேற்கு டெல்­லி­யில் மக்­கள் நட­மாட்­டம் மிகுந்த பகு­தி­யில் 16 வயது சிறுமி கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் பல திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன. ஷாபாத் டெய்ரி என்­னும் பகு­தி­யில் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை அச்­சி­றுமி பல­முறை கத்­தி­யால் குத்­தப்­பட்­டும் கல்­லால் தாக்­கி­யும் கொல்­லப்­பட்­ட­தைத் தடுக்க யாரும் முன்­வ­ர­வில்லை. இச்­சம்­ப­வம் தொடர்­பில் சாஹில், 20, என்­ப­வர் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் திங்­கட்­கிழமை கைது செய்­யப்­பட்­டார். அவர் கொல்­லப்­பட்ட சிறு­மி­யின் காத­லர் என்­பது காவல்­துறை விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

சிறு­மியை 22 முறை கத்­தி­யால் அந்த இளை­யர் குத்­து­வது அப்­ப­கு­தி­யில் இருந்த கண்­காணிப்­புப் படக்­க­ரு­வி­யில் (சிசி­டிவி) பதி­வாகி உள்­ளது. அதன் பின்­னர் சிறு­மி­யின் தலை­யில் பெரிய கான்­கி­ரீட் கல்­லால் அவர் தாக்­கு­வ­தும் தெரிந்­தது. அதன் பின்­னர் வீதி­யில் சிறுமி சட­ல­மாக விழுந்து கிடந்­தார். தமது நண்­ப­ரின் மகன் பிறந்த நாளில் கலந்து­கொள்ள சிறுமி சென்­ற­போது அவரை வழி­ம­றித்து சாஹில் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கொலை வழக்குப் பதிவு செய்­யப்­பட்ட இளை­யர் நேற்று நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டார்.

அவரை காவல்­து­றை­யி­னர் விசா­ர­ணை­யில் எடுத்து விசா­ரிக்­கும்­போது இன்­னும் பல தக­வல்­கள் வெளி­வ­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கொலைக்­கான கார­ணம் என்ன என்­ப­தும் அப்­போது தெரிய வரும். நடந்­தி­ருப்­பது திட்­ட­மிட்ட கொலை என்று காவல்­துறை சந்­தே­கிக்­கிறது. கார­ணம், உள்­ளூர் சந்­தை­யில் 15 நாள்­க­ளுக்கு முன்­னரே சாஹில் கத்தி ஒன்றை வாங்­கி­யது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

சிறு­மி­யைத் தாக்­கி­விட்டு இரண்டு பேருந்­து­களில் மாறி மாறி பய­ணம் செய்து உத்­த­ரப் பிர­தே­சத்­தின் புலந்த்­ச­ஹர் பகு­திக்கு சாஹில் தப்­பிச் சென்­று­விட்­டார்.

இருப்­பி­னும் தீவிர விசா­ர­ணை­யின் பல­னாக ஒரேநாளில் அவர் கைது செய்­யப்­பட்­டார். இரு­வ­ருக்­கும் இடையே பழக்­கம் இருந்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது. ஆனால், அந்த ஆட­வர் யாரென்றே தெரி­யாது என சிறு­மி­யின் தாயார் தெரி­வித்­தார்.

இந்­தப் படு­கொ­லையை டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார்.