தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$18,888 வென்ற செல்வம்

1 mins read
7306cfb8-a1a4-4a54-8a02-6d17c023d873
-

அனுஷா செல்­வ­மணி

வெளி­நாட்டு ஊழி­ய­ரான ஆறு­முகம் செல்­வம், 42, விளை­யாட்டு மூலம் $18,888 ரொக்­கத்தை வெல்­வார் என துளி­யும் நினைத்­தி­ருக்­க­வில்லை.

அவர் பணி­பு­ரி­யும் 'போலி­சம் என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தில் நிகழ்ச்­சி­யின் விளை­யாட்டு அங்­கத்­தில் நெட்­ஃபி­ளிக்ஸ் தொலைக்­காட்சி தொட­ரான 'ஸ்கு­விட் கேம்' நாட­கத்தை மைய­மாக வைத்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட சவால்­மிக்க விளை­யாட்­டில் முத­லி­டத்­தில் வந்து இத்­தொ­கையை அவர் வென்­றார்.

"இந்­தத் தொகையை நான் ஒன்­றரை ஆண்­டு­கள் பணி­பு­ரிந்­தால்­தான் ஈட்ட முடி­யும்" என்று சிரித்­த­ப­டியே கூறி­னார்.

கடந்த சனிக்­கி­ழமை நிறு­வனத்­தின் வளா­கத்­தில் நிகழ்ச்சி இடம்­பெற்­றது.

இத்தொலைக்­காட்சித் தொட­ரைப் பற்றி கேள்­விப் ப­டாத செல்வம் விளை­யாட்டு­களின் விதி­மு­றை­க­ளைத் தெளி­வாக புரிந்­து­கொள்­ளா­மல் விளை­யா­டி­யதாகக் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்­டை­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 15 ஆண்­டு­க­ளுக்கு முன் வந்த இவருக்கு திரு­ம­ண­மாகி பதின்ம வய­து­களில் ஒரு மகளும், இரு மகன்­களும் இருக்­கி­றார்­கள்.

எட்­டாம் வகுப்­பு­வரை படித்த திரு செல்வம் இந்த நிறு­வ­னத்­தில் ஆறு ஆண்­டு­க­ளாக பளு­தூக்­கும் இயந்­தி­ரத்தை இயக்­கு­ப­வ­ராக இருக்­கி­றார். பணம் நிறு­வ­னத்­திற்­கு­தான் உரி­யது என்று தொடக்­கத்­தில் அதை இவர் ஏற்க மறுத்­துள்­ளார்.

"இந்­திய மதிப்­பில் இது கிட்­டத்­தட்ட 12 லட்­சம். நான் கன­வில்கூட நினைக்­காத ஒன்று. வறு­மை­யில் சிக்­கித் தவித்த எனக்கு கட­வுள் அளித்த உதவி," என்ற செல்வத்­தின் கண்­க­ளின் ஓரத்­தில் நீர் எட்­டிப் பார்த்­தது.

sanush@sph.com.sg