லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற ஷாமினி ராதாகிருஷ்ணன்

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற ஷாமினி ராதாகிருஷ்ணன்

2 mins read
f632cb27-e5b2-4d94-8186-97857d11db40
-

மோன­லிசா

மருத்­து­வப் பணி­யி­லும் சமூக சேவை­யி­லும் சிறந்து விளங்­கும் டாக்­டர் ஷாமினி ராதா­கி­ருஷ்­ணன் இவ்­வாண்­டின் லீ குவான் இயூ உப­கா­ரச் சம்­ப­ளத்தை பெற்ற பெரு­மைக்­கு­ரிய மூவ­ரில் ஒரு­வர்.

அமெ­ரிக்­கா­வின் ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முது­நி­லைப் படிப்பை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

சுகா­தார அமைச்­சின்கீழ் பொதுச் சுகா­தார நிபு­ணத்­துவ பயிற்­சி­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 28 வயது ஷாமினி, இளைய மருத்­து­வர்­க­ளுக்­கான தேசிய நல்­வாழ்வு குழு­வின் முயற்­சி­களில் முனைப்­பு­டன் பங்­காற்றியிருக்கும் இவர், சுகா­தார அமைச்­சின் தொற்று நோய்­கள் பிரி­வில் சுவாச நோய்க்­கி­ரு­மி­க­ளுக்­கான தேசிய கண்­கா­ணிப்­புப் பிரி­வி­லும் பணி­யாற்றி வரு­கி­றார்.

கொவிட்-19 தொற்­று­நோய் பர­வி­ய­போது மருத்­து­வப் பணி யைத் தொடங்­கிய ஷாமினி 'கொவிட்-19 மீள்­தி­றன் பதக்­கம்' பெற்றவர்களில் ஒருவர்.

பெருந்தொற்றுச் ­சூ­ழ­லில் நோயா­ளி­களை கவ­னித்­துக்­கொள்­வ­தும் அவர்­க­ளின் மன அழுத்­தத்­தைக் கையாள்­வ­தும் மிகுந்த சவா­லாக இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார். குறிப்­பாக தொடர்ந்து 30 மணி நேரம் என்-95 முகக்­க­வ­சத்­து­டன் தனி­ந­பர் பாது­காப்பு சாத­னம் அணிந்து பணி­பு­ரிந்­தது உட­ல­ள­வில் சோர்­வை­யும் நோயா­ளி­க­ளு­டன் வாய்­மொழி அல்­லாத தொடர்பை ஏற்­ப­டுத்­து­வ­தில் சிர­மத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­சொன்­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மருத்­துவ நிலை­யத்­தில் மருத்­துவ தொண்­டூ­ழி­ய­ரா­கவும் பணி­யாற்­றி உள்ளார். பெரும்­பா­லும் குடும்பத் தின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யி­லேயே அக்­கறை கொண்­டி­ருக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளி­டம் உடல்­ந­ல­னின் முக்­கி­யத்­து­வத்­தைப் புரி­ய­வைத்து ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றையை அவர்­க­ளுக்கு நடை­மு­றை­யாக்­கிய அனு­ப­வங்­கள் மன­நி­றைவை அளித்­தன.

மருத்­து­வம் என்­பது சிகிச்­சை­, மருந்­து­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, நோயா­ளி­க­ளின் மனத்தை புரிந்­து­ கொண்டு அவர்­க­ளின் உடல்­நலனை மேம்­ப­டுத்த உத­வு­வது என்­பது இவ­ரின் நம்­பிக்கை. அதற்கு மொழி ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது என மருத்துவ சீன மொழி­யும் படித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் மக்­க­ளின் சரா­சரி ஆயுட்­கா­லத்­தில் ஆரோக்­கி­ய­மான கால­கட்­டத்தை அதி­க­ரிக்க பாடு­பட வேண்­டும் என்­பதே ஷாமி­னி­யின் குறிக்­கோள்.

"நோய்­க­ளுக்­கான சிகிச்சை முறை­கள் எவ்­வ­ளவு முக்­கி­யமோ அதைவிட அந்த நோய்­கள் வர­மால் தடுப்­பது ஆரோக்­கி­ய­மான சமூக மேம்­பாட்­டிற்கு அவசி­ய­மாகிறது. தொடர்ந்து அதில் அதிக கவ­னம் செலுத்த விரும்­பு­கி­றேன்" என்றார் ஷாமினி.

இவ­ரு­டன், கல்வி அமைச்­சைச் சேர்ந்த திரு­வாட்டி ஜீன் டான் என் கீ, 37, துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்­டின் துணை முதன்மை அந்­த­ரங்­கச் செய­லா­ளா­ர் திரு பெக் யிபெங், ஆல்பர்ட், 36 இரு­வ­ரும் இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்தைப் பெற்றனர்.

monolisa@sph.com.sg