வீவக குடியிருப்புப் பேட்டையில் இறந்துகிடந்த புறாக்கள்

வீவக குடியிருப்புப் பேட்டையில் இறந்துகிடந்த புறாக்கள்

2 mins read
60ebc21f-da78-4057-8827-24b3be676828
ஒரு மணி நேரத்­தில் அங்கு வந்த அமைப்­பி­னர் இறந்த பற­வை­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­து­டன் ஏழு புறாக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்­த­னர். படங்கள்: எம்.எஸ்.ஆயிஷா -

ஈசூன் அவென்யூ 11ல் உள்ள புளோக் 436க்கும் புளோக் 438க்கு இடைப்­பட்ட பொது இடத்­தி­லும் புல்­வெ­ளி­யி­லும் மே 22ம் தேதி அன்று மாலை 6 மணி­ய­ள­வில் கிட்­டத்­தட்ட 30 புறாக்­கள் இறந்த அல்­லது மயங்கிய நிலை­யில் கிடந்­ததை திரு­வாட்டி ஆய்­லிஷா கண்­டார். அந்த இடத்­தைச் சுற்றி சில குழந்­தை­கள் விளை­யா­டிக் கொண்டு இருந்­த­தை­யும் அவர் பார்த்­தார்.இரவு 10 மணிக்கு புறாக்­கள் அங்­கேயே இருப்­ப­தைக் கண்ட அவர் 'ஏக்­கர்' எனப்­படும் விலங்கு நல ஆய்வு, கல்வி அமைப்பை அழைத்­தார். ஒரு மணி நேரத்­தில் அங்கு வந்த அமைப்­பி­னர் இறந்த பற­வை­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­து­டன் ஏழு புறாக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்­த­னர்.

ஈசூன் குடி­யி­ருப்­பா­ள­ரான அவர் இந்த விவ­ரங்­களை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார். இது குறித்து அவர் நீ சூன் நகர மன்­றத்­திற்கு எழு­தி­னார். திரு­வாட்டி ஆயி­ஷா­வுக்கு மன்­றம் அனுப்­பிய பதில் மின்­னஞ்­ச­லில், இது புறா கட்­டுப்­பாட்­டுத் திட்­டத்­தின் ஒரு பகுதி என்­றும் இறந்த புறாக்­கள் உரிய நேரத்­தில் அகற்­றப்­ப­டா­தது குறித்து வருத்­தம் தெரி­வித்­தும் எழுதி­யி­ருந்­தது.

புறாக்­க­ளின் எண்­ணிக்­கையை நிர்­வ­கிப்­ப­தற்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் மாறு­பட்ட கோரிக்­கை­களை நிவர்த்தி செய்­வ­தற்­கும் புறாக் கழி­வு­களில் உள்ள பாக்­டீ­ரி­யாக்­க­ளால் நோய்­வாய்ப்­ப­டா­மல் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும் துடிப்­பான, சீரான அணு­கு­மு­றை­யைக் கைக்­கொள்­வ­தாக ஸ்ட்­ரெய்ஸ்ட் டைம்­சி­டம் நகர மன்­றப் பேச்­சா­ளார் கூறி­னார்.

பற­வை­களைக் கொல்லப் பயன்­ப­டுத்­தப்­படும் ஆல்பா குளோ­ரோ­லோஸ் (ஏசி) அவற்­றுக்­குக் கொடுக்­கப்­பட்டிருக்­க­லாம் என்­றார் ஏக்­கர்­ஸின் இணை தலைமை நிர்வாகியான அன்­ப­ரசி பூபால். இது உண­வில் கலந்­து­கொடுக்­கப்­ப­டு­கிறது. கடந்த ஈராண்­டு­களில் விஷம் வைக்­கப்­பட்ட 1,000க்கும் மேற்­பட்ட பற­வை­க­ளைத் தமது அமைப்பு காப்­பாற்றி உள்­ள­தா­க­வும் ஸ்ட்­ரெய்ஸ்ட் டைம்­சி­டம் கூறி­னார்.

புறாக்­கள் பெருக்­கத்­தைக் கட்டுப்­ப­டுத்த ஏசி உப­யோ­கிப்­பதை நிறுத்­து­மாறு நகர மன்­றங்­க­ளி­டம் லாப நோக்­க­மற்ற அமைப்­பான ஏக்­கர்ஸ் கேட்டு வரு­கிறது.

இப்­ப­டிச் செய்­வது மனி­தா­பி­மா­ன­மற்­றது, பய­னற்­றது மட்­டு­மல்ல, அதை எந்த விலங்கு சாப்­பிட்­டா­லும் பாதிப்பு ஏற்­படும்.

பற­வை­கள் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த அவற்­றுக்கு உணவு கிடைக்­கும் வழி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது ஒரு நல்ல வழி­முறை என்­றும் திரு­வாட்டி அன்­ப­ரசி குறிப்­பிட்­டார்.