நிறைந்த மனதுடன் நனைந்த மக்கள்

அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் திருக்­கு­ட­மு­ழுக்கு விழா­வைக் காணக் கூடி­யி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­க­ளின் உறு­தி­யைச் சோதித்­தது, சோவெ­னப் பெய்த கன­மழை.

நேற்­றுக் காலை 8 மணி­ய­ள­வில் மழை பெய்­த­போது ஆல­யத்­தின் முன்பு அமர்ந்­தும் நின்­றும் இருந்த பக்­தர்­கள், ஆல­யத் தொண்­டர் கொடுத்­தி­ருந்த வண்ண மழை­யங்­கி­களை அணிந்­த­னர்.

அப்­போது பல்­வேறு வண்­ணங் களு­டன் காணப்­பட்­டது கிட்­டத் தட்ட ஒரு மில்­லி­யன் செல­வில் புதுப்­பிக்­கப்­பட்ட கோயில் கட்ட டம் மட்­டு­மல்ல. ஊனு­டம்பு ஆல­யங்­க­ளா­கத் திகழ்ந்த பக்­தர் கூட்­டம் பல வண்­ணக் கடல் போலத் தோற்­ற­ம­ளித்­தது.

கோயி­லின் 75 அடி உயர கோபு­ரத்­தின் மீது சிவாச்­சா­ரி­யர்­கள் ஏறி யாக­சா­லை­யி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட நன்­னீரை காலை 9.15 மணிக்கு ஊற்­றி­ய­தைச் சுமார் 12,000 பக்­தர்­கள் மழை நீரில் நனைந்­த­ப­டியே கண்டுக­ளித்­த­னர்.

கோயி­லின் மூல­வ­ரான தெண்­டா­யு­த­பாணி பெரு­மா­னின் சன்­னதி மீதுள்ள 28 அடி உயர சிறிய கோபுரங்களுக்கும் 12 அடி உள்ள மீனாட்சி, சுந்­த­ரேஸ்­வ­ரர் சன்­னதி களின் சிறிய கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்­றப்­பட்­டது.

சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சரும் 2ஆம் சட்ட அமைச்­சருமான எட்­வின் டோங் ஆகி­யோர் விழா­வைச் சிறப்­பித்தனர். பின்­னர் சுமார் 11 மணி அள­வில் பக்­தர்­கள் வரி­சை­யாக சென்று இறை தரி­ச­னம் செய்­த­னர். வான்­ம­ழை­யு­டன், பிர­பல செவ்­வி­சைப் பாட­கர் சீர்­காழி சிவ­சி­தம்­ப­ர­மும் பன்­னி­ரண்டு இசைக்­க­லை­ஞர்­களும் வந்­தி­ருக்­கும் பக்­தர்­கள் மீது இசை­மழை பொழிந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் பத்து சிவாச்­சா­ரி­யார்­க­ளு­டன் இந்­தி­யா­வி­லி­ருந்து வரவழைக்கப்பட்ட 46 சிவாச்சாரி­யர்­களும் இணைந்து பணி­யாற்­றி­னர்.

‘சிவ­ஸ்ரீ அண்ணா’ எனப் பிர­ப­ல­மாக அழைக்­கப்­படும் பிச்சை குருக்­கள், இக்­கு­ட­மு­ழுக்கு விழாவை ‘சர்­வ­சா­த­கம்’ என்ற தலை­மைப் பொறுப்­பில் வழி நடத்­தி­னார். சிற்­பி­கள் 15 பேரும் இந்­தி­யா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப் பட்­ட­னர்.

கோயில், ஒட்­டு­மொத்­த­மாக நேற்று கிட்­டத்­தட்ட 30,000 பக்­தர்­ க­ளுக்­குத் தனது மணிக்­க­தவு ­க­ளைத் திறந்­தது. முதி­யோர், சக்­கர நாற்­கா­லி­யில் வந்­தி­ருந்­தோர் உள்­ளிட்ட பலர், குட முழுக்கை அமர்ந்­த­ப­டியே காணும் வச­தியை ஆல­யம் ஏற்­ப­டுத்­தி யிருந்தது. இப்­பெ­ரும் நிகழ்ச்­சிக்­காக கிட்­டத்தட்ட 1,000 தொண்டூழி­யர்­கள் ஆலய வளா­கத்­தைச் சுற்றி இருந்து பக்­தர்­ க­ளுக்கு வழி­காட்­டி­னர்.

பக்­தர்­க­ளுக்கு உணவு பரி­மாறு­வ­தற்­காக 1,000 இருக்கை ­களுக்­கான இட­வ­சதி உடைய கூடா­ரம் ஒன்று ‘இயூஇ ஸ்கு­வேர்’ கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் உள்ள திறந்­த­வெ­ளி­யில் அமைக் கப்­பட்­டது. சாதம், வெஜி­ட­பிள் பிரி­யாணி, சுவை­யான காய்­க­றி­கள், பாயசம், அப்­ப­ளம் என பல­வகை உணவு இரண்டு நாள் பரி­மா­றப்­பட்­டன.

இந்­நி­லை­யில் பிர­த­மர் லீ சியன் லூங் இவ்­வி­ழா­விற்­குச் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­வ­தாக முன்­னர் அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் அவ­ருக்கு மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டு­விட்­ட­தால் அவரால் வருகை அளிக்க முடி­ய­வில்லை.

அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லின் 8வது திருக்­கு­ட ­முழுக்­கைக் காண ஆவ­லு­டன் காத்­தி­ருந்த போதும் மற்­ற­வர்­க­ளின் பாது­காப்­புக் கருதி நான் இத­னைத் தவிர்க்க வேண்­டி­யுள்­ளது,” என்று சமூக ஊடக பதி­வு­ களில் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டு உள்­ளார்.

ஈராண்­டுக்கு நீடித்த தயா­ரிப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு திருக்­கு­ட­முழுக்கு வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­ய­தாக இக்­கோ­யிலை நிர்­ வ­கிக்­கும் செட்­டி­யார் கோயில் குழு­மத் தலை­வர் எம். சாமிநாதன், 60, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!