தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் மேற்குப் பகுதியில் இருக்கும் ஜலிஸ்கோ என்ற மாநிலத்தில் ஏழு பேர் காணாமல் போய்விட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
அவர்களைத் தேடி சோதனை மேற்கொண்டபோது அதிகாரிகள் 40 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் 45 பைகளைக் கண்டனர். அப்பைகளில் மனித உடல் பாகங்கள் இருந்தன.
அவை ஆண்கள், பெண்களின் உடல் பகுதிகள் என்று அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்தப் பள்ளத்தாக்குக்கு அருகே உள்ள ஸாபோபான் என்ற நகரம் தொழில்துறை மையமான குவாடலாஜரா என்ற பகுதிக்கு புறத்தே அமைந்து இருக்கிறது.
மெக்சிகோவில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 340,000க்கும் மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

