7 பேரைத் தேடிபோனபோது 40 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் 45 பைகளில் மனித உடல்கள்

7 பேரைத் தேடிபோனபோது 40 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் 45 பைகளில் மனித உடல்கள்

1 mins read
0cde3109-1183-4623-b609-085a71eb1a00
-

தென் அமெ­ரிக்க நாடான மெக்­சி­கோ­வில் மேற்­குப் பகு­தி­யில் இருக்­கும் ஜலிஸ்கோ என்ற மாநி­லத்­தில் ஏழு பேர் காணா­மல் போய்­விட்­ட­தா­கப் புகார் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­க­ளைத் தேடி சோதனை­ மேற்­கொண்­டபோது அதி­கா­ரி­கள் 40 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் 45 பைகளைக் கண்­ட­னர். அப்பைகளில் மனித உடல் பாகங்­கள் இருந்­தன.

அவை ஆண்­கள், பெண்­களின் உடல் பகு­தி­க­ள் என்று அர­சாங்க வழக்­குரை­ஞர் அலு­வ­ல­கம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

அந்­தப் பள்­ளத்­தாக்­குக்கு அருகே உள்ள ஸாபோ­பான் என்ற நக­ரம் தொழில்­துறை மைய­மான குவா­ட­லா­ஜரா என்ற பகு­திக்கு புறத்தே அமைந்து இருக்­கிறது.

மெக்­சி­கோ­வில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 340,000க்கும் மேற்­பட்ட மக்­கள் கொலை செய்­யப்­பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.