தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

288 பேர் இறப்பு, 800 பேர் காயம்

2 mins read
151ac812-6510-46ac-baca-1c1be4d6e657
-

இந்தியாவில் மோசமான ரயில் விபத்து; பிரதமர் மோடி நேரில் ஆய்வு; உயர்மட்ட அளவில் விசாரணை

இந்­தி­யா­வில் மூன்று ரயில்­கள் மோதிக்­கொண்ட மோச­மான விபத்­தில் குறைந்­தது 288 பேர் மாண்­டு­போ­யி­னர்; 800க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

கோல்­கத்­தா­வி­லி­ருந்து சென்னை நோக்­கிச் சென்ற கோர­மண்­டல் விரைவு ரயில், பெங்­க­ளூ­ரி­லி­ருந்து கோல்­கத்தா நோக்­கிச் சென்ற அதி­வி­ரைவு ரயில், சரக்கு ரயில் ஆகி­யவை தொடர்­பு­டைய இவ்­வி­பத்து ஒடிசா மாநி­லம், பாலேஸ்­வர் அருகே நேற்று முன்­தி­னம் இரவு 7 மணி­ய­ள­வில் நிகழ்ந்­தது.

கோர­மண்­டல் ரயில் தவ­றான தடத்­திற்­குத் திரும்பி, அதில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த சரக்கு ரயில் மீது மோதி­ய­தில் அதன் பெட்டி­கள் தடம்­பு­ரண்டு, இன்­னொரு தடத்­தில் விழுந்­ததாகவும் அப்­போது, எதிர்த்­தி­சை­யில் வந்த அதி­வி­ரைவு ரயில் அப்­பெட்­டி­கள்­மீது மோதி­யதாகவும் சொல்­லப்­ப­டு­கிறது.

ராணு­வத்­தி­ன­ரும் தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­ன­ரும் மீட்­புப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். சில ரயில் பெட்­டி­கள் ஒன்­றின்­மேல் ஒன்­றா­கக் கவிழ்ந்­தி­ருந்­ததால் பெட்­டி­களை வெட்­டித்­தான் உள்­ளி­ருந்­தோரை மீட்க முடிந்­தது. மீட்­புப் பணி­களில் இந்­திய விமா­னப் படை ஹெலி­காப்­டர்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்­திய அதி­பர் திரௌ­பதி முர்மு, பிர­த­மர் நரேந்­திர மோடி, மாநில முதல்­வர்­கள் உள்­ளிட்­டோர் மாண்­டோ­ருக்கு இரங்­கல் தெரி­வித்­த­னர்.

விபத்து நிகழ்ந்த இடத்­திற்கு நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்த பிர­த­மர் மோடி, "விபத்­திற்­குக் கார­ண­மானோர் கடு­மை­யா­கத் தண்­டிக்­கப்­படு­வர்," என்­றார்.

பின்னர், விபத்தில் காயமுற்று கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு நேரில் ஆறுதல் கூறினார் திரு மோடி.

மாண்­டோ­ரின் குடும்­பத்­தா­ருக்­கும் காய­ம­டைந்­தோ­ருக்­கும் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய, மாநில அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.

விபத்து குறித்து உயர்­மட்ட அள­வில் விசா­ரணை நடத்த ரயில்வே அமைச்சு உத்­த­ர­விட்டு உள்­ளது.

விபத்து நிகழ்ந்த வழித்­த­டத்­தில் 90 ரயில் சேவை­கள் ரத்­து­செய்­யப்­பட்­டன; 49 ரயில் சேவை­கள் வேறு வழி­களில் இயக்­கப்­பட்­டன.

ஒடிசா, தமிழ்­நாடு மாநி­லங்­கள் நேற்று அர­சு­முறை துக்­கம் கடைப்­பி­டித்­தன. தமி­ழக அமைச்­சர்­கள் உத­ய­நிதி ஸ்டா­லின், சிவ­சங்­கர் இரு­வ­ரும் ஒடிசா சென்­றுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­களை அழைத்­துச்­செல்­ல­சென்­னை­யிலிருந்து புவ­னேஸ்­வருக்­கு நேற்றிரவு சிறப்பு ரயில் இயக்­கப்­பட்­டது.