'பனிப்போர் மனப்பான்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது'

2 mins read

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் சீனா ஆதிக்­கம் செலுத்த முயற்சி செய்­வ­தாக அமெ­ரிக்கா நீண்­ட­கா­ல­மா­கவே குற்­றம் சுமத்தி வரு­கிறது. இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­ட­லில் சீனா­வின் நிலைப்­பாட்டை அதன் தற்­காப்பு அமைச்­சர் ஜென­ரல் லீ ஷாங்ஃபு முன்­வைத்­தார்.

எந்தப் பிரச்சினைக்கும் பேச்சு­வார்த்தை மூலம் தீர்வு காண்­பதே சீனா­வின் விருப்­பம் என்­றார் அவர். ஆனால் அமெ­ரிக்கா அதன் வலி­மை­யைப் பயன்­ப­டுத்தி மற்ற நாடு­களை ஆட்­டி­வைப்­ப­தாக அவர் சாடி­னார்.

அது­மட்­டு­மல்­லாது, ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் நில­வும் அமை­தி­யான சூழலை அமெ­ரிக்கா கெடுப்­ப­தா­க­வும் அவர் குறை­கூ­றி­னார்.

அமெ­ரிக்­கா­வின் பெய­ரைக் குறிப்­பி­டா­மல் அது மற்ற நாடு

­க­ளைக் கட்­டா­யப்­ப­டுத்தி அது நிர்­ண­யிக்­கும் வழி­யில் செல்­ல­வும் விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­க­வும் செய்­வ­தாக ஜெனரல் லீ கூறி­னார்.

ஆசி­யப் பாது­காப்­புக் கருத்­த­ரங்­கின் மூன்­றா­வது மற்­றும் இறுதி நாள் நேற்று நடைபெற்றது. கருத்­த­ரங்­கில் ஆசிய பசி­பிக் வட்­டா­ரம் மற்ற நாடு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ராணுவ உயர் அதி­கா­ரி­கள் கலந்­து­கொண்­ட­னர். அவர்­களில் ஜெனரல் லீயும் ஒரு­வர். கருத்­த­ரங்­கில் அமெ­ரிக்க-சீனா உறவு, உக்­ரேன்-ரஷ்யா போர், தென்­சீ­னக் கடல் விவ­கா­ரங்­கள் ஆகி­யவை குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

பனிப்­போர் மனிப்­பான்மை மீண்­டும் உல­கில் தலை­தூக்­கு­வ­தாக அவர் தெரி­வித்­தார். அத்­து­டன் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பூசல்­களும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். ஆசிய பசி­பிக் வட்­டா­ரம் தொடர்­பான விவ­கா­ரங்­கள் குறித்­தும் கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் நில­வும் அமை­தி­யான சூழலை யார் கெடுக்­கி­றார் என்ற கேள்வி மக்­கள் மன­தில் எழு­கிறது. பூசல்­கள், குழப்­பங்­கள், நிலை­யற்­றதன்­மைக்கு எவை முக்­கிய கார­ணங்­கள்? எதை எதிர்த்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும்?" என்று கருத்­த­ரங்­கில் பேசி­ய­போது திரு லீ கேள்வி எழுப்­பி­னார்.

முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வில் ஆசிய பசி­பிக் வட்­டா­ரம் பாது­காப்­புச் சவால்­களை எதிர்­நோக்­கு­வ­தாக அவர் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

இந்­நி­லை­யில், அணுக்­க­மான பாது­காப்­புப் பங்­கா­ளித்­து­வத்தை மேம்­ப­டுத்த சீனா தயா­ராக இருப்­ப­தாக அவர் கூறி­னார். இந்­தப் பங்­கா­ளித்­து­வம் நியா­ய­மா­ன­தாக இருக்­கும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

உல­க­ளா­வி­ய பாது­காப்­புக் கட்­ட­மைப்பு தொடர்­பாக சீனா கொண்­டி­ருக்­கும் இலக்கு பரஸ்­பர புரிந்­து­ணர்வு, மரி­யா­தை­மிக்­க­தாக இருக்­கும் என்­றார் ஜென­ரல் லீ. கருத்­த­ரங்­கிற்­காக சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கும் ஜென­ரல் லீயு­டன் சந்­திப்பு நடத்த அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­தது. ஆனால், ரஷ்­யா­வி­ட­

மி­ருந்து ஆயுதங்­கள் வாங்­கு­

வ­தைச் சுட்­டிக்­காட்டி தம்­மீது தடை­கள் விதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் கார­ணம் காட்டி அமெ­ரிக்கா விடுத்த அழைப்பை அவர் ஏற்க மறுத்­து­விட்­டார்.