ஆசியாவில் போர் வெடிக்காமல் இருப்பதே முக்கிய இலக்கு

ஆசியாவில் போர் வெடிக்காமல் இருப்பதே முக்கிய இலக்கு

1 mins read

ஆசி­யா­வில் போர் வெடிக்­கா­மல் இருப்­பதே அடுத்த சில ஆண்டு­

க­ளுக்கு முக்­கிய இலக்­காக இருக்­கும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று தெரி­வித்­தார்.

"ஐரோப்­பா­வி­லும் ஆசி­யா­வி­லும் ஒரே நேரத்­தில் போர் மூண்­டால் உலக மக்­க­ளுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­படும் எனும் கருத்­தைப் பலர் ஏற்­பர். ஆனால் உண்மை நில­வ­ரம், புவி­சார்ந்த அர­சி­யல் நில­வ­ரம் இத­னு­டன் வேறு­ப­டு­கிறது," என்று ஷங்­ரிலா கலந்­து­ரை­யா­ட­லில் டாக்­டர் இங் கூறி­னார். தென்­சீ­னக் கடல், தைவான் நீரிணை விவ­கா­ரங்­கள் தொடர்­பாக அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடையே போர் நிக­ழும் அபா­யம் இருந்­ததை டாக்­டர் இங் சுட்­டி­னார்.

இத்­த­கைய எதிர்­பா­ராத நிகழ்வு­கள் கார­ண­மா­கப் போர் வெடிக்­கும் அபா­யம் இருப்­ப­தாக அமைச்­சர் எச்­ச­ரித்­தார்.

எனவே, அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் பிரச்­சி­னை­க­ளுக்­குப் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணத் தயா­ராக இருக்க வேண்­டும் என்­றார் அவர். நேற்று முன்­தி­னம் தைவான் நீரி­ணை­யில் சென்­று­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கப் போர் கப்­ப­லுக்கு 50 மீட்­டர் தூரத்­தில் சீனப் போர்க் கப்­பல் சென்­றது.

அதற்­குச் சில நாள்­கள் முன்பு தென்­சீ­னக் கட­லுக்கு மேல் சென்­று­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கக் கண்­கா­ணிப்பு விமா­னத்தை சீனப் போர் விமா­னம் வழி மறித்­தது. ஆசி­யா­வின் நிலைத்­

தன்­மைக்கு அமெ­ரிக்கா-சீன உறவு மிக­வும் முக்­கி­யம் என்­பதை டாக்­டர் இங் வலி­யு­றுத்­தி­னார். நெருக்கடி நேரம் வரும் வரை காத்திருந்தால் இருநாடுகளுக்கு இடையிலான உறவைச் சரிசெய்ய முடியாமல் போய்விடும் என்றார் அவர்.