மார்ச் 2027க்குள் குதிரை பந்தயத் திடல் மூடப்படும்

கிராஞ்சியில் வீடமைப்பு, இதர மேம்பாடுகளுக்கு வழிவிடுகிறது

கிராஞ்­சி­யில் சிங்­கப்­பூர் குதிரைப் பந்­தய மன்­றம் (சிங்கப்­பூர் டர்ஃப் கிளப்) அமைந்­தி­ருக்­கும் நிலம், 2027 மார்ச் மாதத்­திற்­குள் அர­சாங்­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும். வீட­மைப்பு, இதர மேம்­பா­டு­களுக்கு அந்த இடம் வழி­வி­டு­கிறது.

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளை­யும் உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தை­யும் மேம்­ப­டுத்­து­வது, லிம் சூ காங் வட்­டா­ரத்தை உயர் தொழில்­நுட்ப வேளாண் உண­வுக் குழு­ம­மாக உரு­மாற்­று­வது உள்­ளிட்­டவை மேம்­பாட்டுத் திட்­டங்­களில் அடங்­கும்.

இதன்­மூ­லம், சிங்­கப்­பூ­ரில் 180 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நடை­பெற்று வந்­துள்ள குதி­ரைப் பந்­த­யம் அடுத்த ஆண்டு­டன் முடி­வுக்கு வரு­கிறது. கடந்த பல ஆண்­டு­க­ளாக அப்­பந்­த­யத்­தைப் பார்ப்­போர் எண்­ணிக்கை குறைந்து வந்­து உள்­ளது.

இதன் தொடர்­பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்திப்­பில் பேசிய நிதி, தேசிய வளர்ச்சி இரண்­டாம் அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, “இந்த முடிவு எளி­தான ஒன்­றல்ல என்­றா­லும் தேவை­யான ஒன்று. நிலத்­துக்­கான தேவை அதி­க­ரித்து வந்­துள்­ளது. அதன் பொருட்டு, நிலப் பயன்­பாட்­டுத் திட்­டங்­களை அர­சாங்­கம் அப்­போ­தைக்கு அப்­போது மறு­ஆய்வு செய்­கிறது.

“ஏனெ­னில், சிங்­கப்­பூ­ரர்­களின் தேவை­க­ளைப் பூர்த்­தி­செய்ய வளங்­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­தி­செய்ய நாங்­கள் விரும்­பு­கி­றோம்,” என்று விவ­ரித்­தார்.

ஏறக்­கு­றைய 120 ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்­டி­ருக்­கும் நிலம், ஏறத்­தாழ 200 காற்­பந்துத் திடல்­க­ள் அள­வுக்­குச் சமம். கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தை­விட இது பெரி­யது.

2024 அக்­டோ­பர் 5ஆம் தேதி கடைசி குதி­ரைப் பந்­த­யம் நடை­பெ­றும். 2027 மார்ச் மாதத்­திற்­குள் அந்த வளா­கம் மூடப்­படும்.

நிதி அமைச்­சும் தேசிய வளர்ச்சி அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில், “சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய இடத்தை மறு­மேம்­பாட்­டிற்கு விடு­வது தொடர்­பான முடிவு, எதிர்­கா­லத் தேவை­க­ளுக்கு அந்த நிலத்­தை­யும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளை­யும் முழு­மை­யா­கத் திட்­ட­மிட வகை­செய்­யும்,” என்று குறிப்­பிட்­டன.

வீட­மைப்பு ஒரு­பு­ற­மி­ருக்க, பொழு­து­போக்கு, கேளிக்கை உள்­ளிட்ட மற்ற பயன்­பா­டு­கள் குறித்­தும் தேசிய வளர்ச்சி அமைச்சு ஆராய்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து இயங்­கும் எண்­ணம் கொண்­டுள்ள குதிரை சவாரி சேவை வழங்­கும் அமைப்­பு­க­ளின் தேவை­களை தான் கருத்­தில்­கொள்­வ­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்ற ஊழி­யர்­கள், 2024 அக்­டோ­ப­ரில் இருந்து கட்­டங்­கட்­ட­மாக ஆட்­கு­றைப்பு செய்­யப்­ப­டு­வர் என்று இரு அமைச்­சு­களும் கூட்­ட­றிக்­கை­யில் குறிப்­பிட்­டன.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்­றத்­தில் ஏறக்­கு­றைய 350 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். ஆட்­குறைப்­புத் தொகுப்­புத் திட்­டம், ஆலோ­சனை, வேலை நிய­மன உதவி, தனிப்­பட்ட வாழ்க்­கைத்­தொ­ழில் வழி­காட்டி, திறன் பயிற்சித் திட்­டங்­கள் வடி­வில் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்ற ஊழி­யர்­கள் அல்­லாத பந்­த­யக் குதிரை பயிற்­று­விப்­பாளர்­க­ளுக்கு குதி­ரை­க­ளைப் பரா­ம­ரிக்­க­வும் அவற்றை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­ய­வும் ஆத­ரவு அளிக்­கப்­படும்.

2024 அக்­டோ­பர் 5ஆம் தேதி நடை­பெ­றும் கடைசி குதி­ரைப் பந்­த­யத்­தைத் தொடர்ந்து, குதி­ரை­களை ஏற்­று­மதி செய்­யும் நட­வ­டிக்கை தொடங்­கும். 2026 மார்ச் மாதத்­திற்­குள் அந்த ஏற்­பாடு நிறை­வு­பெ­றும்.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்­றத்­தில் தற்­போது ஏறக்­குறைய 700 பந்­த­யக் குதி­ரை­கள் உள்­ளன. மேலும், அங்கு 38 குதி­ரை­கள் செல்­லப்­பி­ரா­ணி­களாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்­றத்­தின் மர­பு­டை­மை­யை­யும் உள்­ளூர் குதி­ரைப் பந்­த­யத்­தை­யும் அனு­ச­ரிக்க பந்­த­யப் பிடிப்­புக் கழ­கம், சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்தய மன்­றம், இதர பங்­கு­தாரர்­க­ளு­டன் சேர்ந்து அர­சாங்கம் பணி­யாற்­றும்.

சிங்­கப்­பூர் குதி­ரைப் பந்­தய மன்­றம் தற்­போது ஆண்­டுக்கு ஏறத்­தாழ 550 பந்­த­யங்­களை நடத்­து­கிறது. வாரத்­துக்கு ஒரு பந்­தய நாள் இடம்­பெ­று­கிறது. அன்­றைய தினத்­தில் 10 முதல் 13 பந்­த­யங்­கள் வரை நடை­பெறு­கின்­றன.

2010க்கும் 2019க்கும் இடையே, பந்­தய நாளில் கலந்து­கொண்­டோ­ரின் சரா­சரி எண்­ணிக்கை 11,000லிருந்து 6,000ஆகக் குறைந்­த­தாக குதிரைப் பந்­தய மன்­றம் தெரி­வித்­தது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்பட்ட பிறகு 2022 ஏப்­ர­லில் பந்­த­யத் திடல் பொது­மக்­களுக்கு மீண்டும் திறக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த எண்­ணிக்கை 2,600ஆகச் சரிந்­தது.

ஒவ்­வொரு குதி­ரைப் பந்­த­யம் மூல­மும் ஏறக்­கு­றைய $400,000 வரு­வாய் கிடைப்­ப­தாக குதி­ரைப் பந்­தய மன்­றத்­தின் தலை­வர் நியாம் சியாங் மெங் தெரி­வித்­தார். தற்­போது ஆண்­டுக்கு இது $1.1 பில்­லி­ய­னா­கும்.

2010ல் இந்தத் தொகை $2.1 பில்லியனாக இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!