தொடர் கனமழை காரணமாக கிள்ளானில் வெள்ள பாதிப்பு

1 mins read
fb8415b9-5754-4b1e-9bd5-76c85d639ed8
-

மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாநிலம், கிள்­ளான் மாவட்­டத்­தில் உள்ள பண்­டார் புக்­கிட் ராஜா­வில் பெய்த கன­மழை கார­ண­மாக அங்கு பல இடங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

"ஞாயிறு காலை இரண்டு மணி நேரத்­துக்­கும் மேலாக பெய்த கன­மழை கார­ண­மாக ஜாலான் மாக்­யோங் பகுதி மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டு உள்ளது," என்று பண்­டார் புக்­கிட் ராஜா குடி­யி­ருப்­பா­ளர் சங்­கத்­தின் தலைவர் முகம்­மது ஸுல்­கி­ஃப்லி ஒத்மான் கூறி­னார்.

கன­ம­ழை­யால் பண்­டார் புக்­கிட் ராஜா­வில் உள்ள நீர்ப்­பி­டிப்­புக் குளங்­கள் நிரம்பி வழிந்­த­தாக அவர் சொன்­னார்.

பிர­தான சாலை­யும் பல்­வேறு வீடு­களும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டன. வெள்­ள­நீர் 0.3 மீட்­டர் வரை உயர்ந்­தது.

ஷா ஆல­மில் உள்ள ஓட்­டு­நர் பயிற்­சிக் கழ­கத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­கள் எழு­வர், திடீர் வெள்ளம் ஏற்­பட்­ட­தன் கார­ண­மாக அரை மணி­நே­ரம் சாலை­யில் சிக்­கித் தவித்­த­னர். பின்­னர் அவர்­கள் மீட்­கப்­பட்­ட­னர்.

ஜாலான் மேரு, கிள்­ளான் சென்ட்­ரல் அருகே ஏற்­பட்ட வெள்­ளத்­தால் 57 வயது மாது ஒரு­வர் அவ­ரது வாக­னத்­தில் சிக்­கிக்­கொண்­டார்.

வெள்­ள­நீர் சூழ்ந்த சாலை­யில் சென்­ற­போது அந்த வாக­னம் சிக்கிக்­கொண்­ட­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புத்­துறை உதவி இயக்­கு­நர் (செயல்­பாடு) முகம்­மது இஹ்­சான் முகம்­மது ஸயின் கூறி­னார்.