முக்கிய அணை தகர்ப்பு, மக்கள் வெளியேற்றம்; உக்ரேனும் ரஷ்யாவும் மாறி மாறி குற்றச்சாட்டு

தெற்கு உக்­ரே­னில் ரஷ்ய கட்­டுப்­பாட்­டில் உள்ள பகு­தி­யில் சோவி­யத்­கால அணை குண்டு வைத்து தகர்க்­கப்­பட்­ட­தால் போர்ப் பகுதி யில் வெள்­ளம் புகுந்­தது.

நோவா ககோவ்கா என்ற அந்த அணை­யி­லி­ருந்து தண்­ணீர் பீறிட்டு வெளி­யே­றி­ய­தால் கரை­யோ­ர­மாக உள்ள மக்­கள் அவ­சர அவ­ச­ர­மாக வெளி­யேற்றப் பட்டு வரு­கின்­ற­னர்.

அணை தகர்க்­கப்­பட்­ட­தற்கு ரஷ்­யா­வும் உக்­ரே­னும் ஒன்­றை­யொன்று குற்­றம்சாட்டி உள்ளன.

நீர் மின் நிலை­யத்­தின் அணையை ரஷ்யா உடைத்து விட்­ட­தாக உக்­ரேன் குற்­றம் சாட்டி­யுள்­ளது. ரஷ்­யா­வும் இது உக்­ரே­னின் சதி வேலை என்று சாடி­யது.

சமூக ஊடகங்­களில் பதி­வேற்­றப்­பட்ட படங்­களில் அணை உடைந்து தண்­ணீர் பீறிட்டு வெளி­யே­று­வதை பலர் அதிர்ச்­சி­யு­டன் பார்க்­கின்­ற­னர்.

உக்­ரேன் அதி­பர் ஸெலன்ஸ்கி, தேசிய பாது­காப்பு தொடர்­பாக அவ­சர ஆலோ­சனைக் கூட்­டத்தை கூட்­டி­யுள்­ளார்.

இதில் அவ­ச­ர­மாக எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

உக்­ரேன் வெளி­யு­றவு அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை யில், ஐநா பாது­காப்பு மன்­றத்தை அவ­ச­ர­மா­கக் கூட்ட வேண்­டும் என்று கேட்­டுக்கொள்­ளப்­பட்­டது.

ரஷ்­யா­வின் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லால் அணைக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ளது. மாஸ்கோ அனைத்­து­ல­கத் தடை­களை எதிர்­கொள்ள வேண்­டும் என்று அறிக்கை எச்­ச­ரித்­தது.

உக்­ரே­னின் நட்பு நாடு­களும் தாக்­கு­த­லுக்கு கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

ஐரோப்­பிய ஒன்­றிய மன்­றத்­த­லை­வர் சார்ல்ஸ் மைக்­கல், நோவா ககோவ்கா அணையை ரஷ்யா தகர்த்­தது போர்க் குற்­றத்­திற்கு ஈடா­னது என்­றார்.

ஆனால் உக்­ரேன் வேண்­டு­மென்றே அணை­யைச் சேதப் படுத்­தி­யுள்­ள­தாக ரஷ்யா கூறி யுள்­ளது.

ரஷ்யா ஆக்­கி­ர­மித்­துள்ள நோவா ககோவ்கா நக­ரத்­தின் நிர்­வா­கத் தலை­வ­ரான விளா­டி­மிர் லியோன்­டிவ், அணை உடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­வதை மறுத்­துள்­ளார். உக்­ரே­னின் தாக்­கு­த­லால் அணைக்கு சேதம் மட்­டுமே ஏற்­பட்­டுள்­ளது, உடைய வில்லை என்­றார்.

சுமார் 30 மீட்­டர் உய­ர­மும் 3.2 கிலோ மீட்­டர் நீள­மும் கொண்ட நோவா ககோவ்கா அணை 1956ல் டினீ­பர் ஆற்­றில் கட்­டப்­பட்­டது. ககோவ்கா நீர் மின்­சார ஆலை­யின் ஒரு பகு­தி­யாக இது அமைக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!