மலேசியாவில் சிங்கப்பூர் காரை துரத்திய பரபரப்பு காணொளி; இரு போலி அதிகாரிகள் கைது

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து கெந்­திங் மலையை நோக்­கிச் சென்ற காரை மற்­றொரு வாக­னம் விடா­மல் துரத்­திய சம்­ப­வத்­தின் காணொளி சமூக ஊட­கங்­களில் நெருப்­பாக பர­விய நிலை­யில் அதன் தொடர்­பில் இரண்டு சந்­தேக நபர்­களை ஜோகூர் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

அவர்­களில் ஒரு­வர் அர­சாங்க ஊழி­யர். மற்­றொருவர் போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றச் செயல்­களில் ஈடு­பட்­ட­வர் என நம்­பப்­ப­டு­கிறது.

இரு­வ­ரும் நேற்று மாலை 6.00 மணி­ய­ள­வில் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று ஜோகூர் மாநி­ல காவல்­துறை தலை­வர் கம­ருல் ஸமான் மாமாட் தெரி­வித்­தார்.

இரு­வ­ருக்­கும் வயது 43 முதல் 48 வரை இருக்­கும். பொந்­தி­யா­னில் உள்ள பெர்­மாஸ் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் 3வது நபர் தேடப்படுவதாகவும் அவர் கூறி­னார்.

ஜோகூ­ரில் கூலாய்க்­குச் செல்­லும் பாதை­யில் செட­னாக்­குக்கு அடுத்­துள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்­சாலை 27 கிலோ மீட்­ட­ரில் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சென்ற காரை காவல்­துறை வாக­னம் போல தோற்­ற­ம­ளித்த மற்­றொரு வாக­னம் விரட்­டிப் பிடிக்க முயற்சி செய்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தின் காணொ­ளிக் காட்­சியை ‘ஃபிரிமேன் கான் டபிள்­யூடி’ என்ற பெய­ரில் ஒரு­வர் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டி­ருந்­தார்.

திங்­கள்­கி­ழமை அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் நண்­ப­ரு­டன் தான் காரில் சென்­ற­போது மற்­றொரு வாக­னம் பின்­தொ­டர்ந்து பின்­னர் அதி­வே­கத்­தில் தொடர்ந்து விரட்­டி­ய­தாக கான் தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அந்த வாக­னத்­தின் மேற்­பு­றத்­தில் நீல நிற ஒளி­ரும் விளக்­கு­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தால் காவல்­துறை வாக­னம் என்று முத­லில் நினைத்­த­தா­க­வும் பின்­னர் சந்­தே­கம் எழுந்­த­தா­க­வும் அவர் சொன்னார்.

வாக­னம் தொடர்ந்து துரத்­திக் கொண்­டி­ருந்த சம­யத்­தில் கான் காவல்­து­றை­யி­ன­ரு­டன் தொடர்பு கொண்டு பேசி­னார். அப்­போது காரை நிறுத்த வேண்­டாம், தேவை ஏற்­பட்­டால் அரு­கில் உள்ள காவல் நிலை­யத்­திற்­குச் செல்­லு­மா­றும் காவல்­து­றை­யி­னர் அறி­வு­றுத்­தி­னர்.

பின்­னர் நெடுஞ்­சாலை 71 கிலோ மீட்­ட­ரில் போலி காவல்­துறை வாக­னம் மாய­மா­கி­விட்­டது. காலை 8.10 மணி­ய­ள­வில் மக்­கள் நெரி­சல்­மிக்க பாது காப்பான இடத்­தில் தனது காரை கான் நிறுத்­தி­னார்.

கைது செய்­யப்­பட்ட நபர்­க­ளி­ட­மி­ருந்து வாக­னத்­தின் மேற்­பு­றத்­தில் பொருத்­தக்­கூ­டிய ஒளி­ரும் விளக்­கு­கள், மேற்­சட்டை, டார்ச், கார் ஆகி­ய­வற்றை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

சந்­தேக நபர்­களில் ஒரு­வர் இரண்டு நாள் தடுப்­புக் காவ­லில் வைக்க அனு­மதி வழங்­கப்­பட்­டது. ஆனால் மற்­றொரு சந்­தேக நப­ரான அர­சாங்க ஊழி­ய­ருக்கு தடுப்­புக் காவல் உத்­த­ரவு நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்று ஜோகூர் காவல்­துறை தெரி­வித்­தது.

சம்­ப­வம் பற்றி காவல்­துறை அதி­காரி ஒரு­வர் திங்­கள் இரவு 1.52 மணிக்கு புகார் செய்­தி­ருந்­தா­கக் கூறிய கூலாய் தற்­கா­லிக காவல்­துறை தலை­வர் யூசோஃப் உது­மான், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் புகார் அளிக்­க­வில்லை என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!