தூசுமூட்டம் இனியொரு பிரச்சினையல்ல என்கிறார் இந்தோனீசிய அமைச்சர்

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து அண்டை நாடு­க­ளுக்­குப் பர­வும் எல்­லை தாண்­டிய தூசு­மூட்­டம் இனி­யொரு பிரச்­சி­னை­யாக இருக்­காது என்று இந்­தோ­னீ­சிய கடல்­துறை விவ­கார, முத­லீடுகளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் லுஹுட் பின்­சார் பண்ட்­ஜய்­டான் தெரி­வித்­துள்­ளார்.

எல் நினோ­வின் வறண்ட, வெப்­ப­மான காலத்­தி­லும் தூசு­மூட்­டம் ஏற்­ப­டாது. இந்­தப் பிரச்­சி­னைக்கு நாடு முன்­னேற்­பாடு களு­டன் ஆயத்­த­மாக இருப்­பதே அதற்கு கார­ணம் என்று அமைச்­சர் கூறி­னார்.

செயற்கை மழை பொழிய வைப்­ப­தற்­காக அதி­கா­ரி­கள் பரு­வ­நிலை மாற்று தொழில்­நுட்­பத்தை ஆராய்ந்து வரு­கின்­ற­னர். நீர்த்­தேக்­கங்­களும் அதி­க­ரிப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இது, காய்ந்த நிலப்­ப­கு­தி­யில் தீ மூளு­வ­தைத் தடுக்­கும் என்று அவர் கூறி­னார்.

அமைச்­சர் லுஹுட், சுற்­றுச் சூழல் தொடர்­பான மாநாட்­டில் கலந்­து­கொண்ட பிறகு செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

அப்­போது தூசு­மூட்­டம் குறித்து சிங்­கப்­பூ­ரர்­கள் கவ­லைப்­பட வேண்­டி­யி­ருக்­குமா என்று கேட்­கப்­பட்­டது.

2016ஆம் ஆண்­டில் தூசு­மூட்­டத்தை நிர்­வ­கிக்­கும் பொறுப்பை ஏற்­றி­ருந்த திரு லுஹுட், அப்­போ­தி­லி­ருந்து இந்­தப் பிரச்­சினை படிப்­ப­டி­யா­கக் குறைந்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

சுமத்­ரா­வி­லும் கலி­மந்­தா­னி­லும் செம்­ப­னைத் தோட்­டங்­கள் எரிக்­கப்­பட்­ட­தால் காற்­றில் அதிக அளவு தூசு கலந்து காற்­றின் தரம் அப்­போது மோசமடைந்­த­தால் ஆபத்­தான நிலையை எட்­டி­யது. இத­னால் காட்­டுத் தீயும் ஏற்­பட்­டது.

சிங்­கப்­பூர் உட்­பட தெற்கு ஆசியா வட்­டா­ரத்­தில் ஜூன் முதல் அக்­டோ­பர் வரை அதிக வெப்­பம், வறண்ட வானி­லையை எதிர்­பார்க்­க­லாம் என்று ஆசி­யான் சிறப்பு வானிலை நிலை­யம் (ஏசி­எம்சி) மே 30ஆம் தேதி தெரி­வித்­தது. 2015ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட சக்­தி­வாய்ந்த எல் நினோ பரு­வ­நி­லை­யால் தென்­கி­ழக்கு ஆசிய வட்­டா­ரமே அடர்ந்த தூசு­மூட்­டத்­தால் மூடப்­பட்­டது. இதன் கார­ண­மாக, அதே ஆண்டு செப்­டம்­ப­ரில் சிங்­கப்­பூ­ரில் உள்ள தொடக்­கப்­பள்ளி மற்­றும் உயர்­நி­லைப் பள்ளிக­ளுக்கு ஒருநாள் விடு­முறை அளிக்­கப்­பட்­டன.

2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்த சுட்­டெ­ரிக்­கும் வானிலை மிக வெப்­ப­மான ஆண்­டா­க­வும் பதி­வா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!