ஒடிசா ரயில் விபத்து; 40 பேர் மின்சாரம் தாக்கி மரணம்

ஒடிசா ரயில் விபத்து; 40 பேர் மின்சாரம் தாக்கி மரணம்

1 mins read

அண்மையில் ஒடிசாவில் நிகழ்ந்த மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 40 பேர் மின்சாரம் தாக்கி மரண மடைந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 278 பேர் உயிரிழந்தனர்.

ஒரே பெட்டியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் அவர்களது உடலில் காயமோ, ரத்தமோ இல்லை. பிரேதப் பரிசோதனையில் 40 பேரும் மின்சாரம் பாய்ந்து இறந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. விபத்தில் ரயில்கள் பயங்கரமாக மோதியதில் மின் கம்பங்கள் சாய்ந்து அவர்களை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.