8.2 விழுக்காடு உயர்வு

2 mins read
2a62a2c1-14e6-4cfe-b208-aa307e21c24e
பண­வீக்­க­மும் வட்டி விகி­த­மும் உயர்ந்­து­வ­ரும் நிலை­யில், இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளின் நிதி­நி­லைமை மேம்­பாடு கண்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் குடும்பங்களின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது

பண­வீக்­க­மும் வட்டி விகி­த­மும் உயர்ந்­து­வ­ரும் நிலை­யில், இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளின் நிதி­நி­லைமை மேம்­பாடு கண்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் மூன்று மாதங்­களில் ஒட்­டு­மொத்த குடும்­பங்­க­ளின் நிகர மதிப்பு $2.6 டிரில்­லி­யன் என்­றும் கடந்த ஆண்­டின் முதல் காலாண்­டை­விட இது 8.2 விழுக்­காடு அதி­கம் என்­றும் புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இந்த வளர்ச்சி, சென்ற ஆண்­டின் இறுதிக் காலாண்­டைக் காட்­டி­லும் அதி­கம். 2021 கடைசிக் காலாண்டை ஒப்பு நோக்க, 2022ஆம் ஆண்­டின் அதே கால­கட்­டத்­தில் குடும்­பங்­க­ளின் நிகர மதிப்பு 6.7 விழுக்­காடு கூடி­யி­ருந்­தது.

இந்த வளர்ச்சி வேக­மா­னது, கொவிட்-19 பர­வலுக்கு முன்­பு இ­ருந்­த­தை­விட அதி­கம் எனக் குறிப்­பிட்­டார் டிபி­எஸ் குழு­மத்­தின் பொரு­ளி­யல் ஆய்­வா­ளர் சுவா ஹான் டெங்.

2017-2019 கால­கட்­டத்­தில் குடும்­பங்­க­ளின் நிகர மதிப்­பா­னது ஆண்­டுக்கு ஆண்டு 6.9 விழுக்­காடு என்ற விகி­தத்­தில் வளர்ச்சி கண்­டது.

சொத்­து­க­ளின் மொத்த மதிப்­பி­லி­ருந்து கடன் பொறுப்­பு­களைக் கழிப்­ப­தன்­மூ­லம் பெறப்­படு­வதே நிகர மதிப்­பா­கக் கூறப்­ப­டு­கிறது.

வங்கி வைப்­புத்­தொகை, பங்கு மதிப்­பு­கள், ஆயுள் காப்­புறுதி, மத்­திய சேம நிதிச் சேமிப்பு­கள், வீடு உள்­ளிட்­டவை சொத்­து­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன. வீட்­டுக் கடன், கட­னட்டை மூலம் பெறப்­படும் கடன்­கள், கார் வாங்­கி­ய­தற்­கான கடன், வீடு புதுப்­பிப்பு போன்­றவை கடன் பொறுப்­பு­க­ளா­கக் கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்றன.

சென்ற ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களை ஒப்­பு­நோக்க, இவ்­வாண்­டின் அதே கால­கட்­டத்­தில் குடும்­பங்­க­ளின் கடன் பொறுப்­பு­கள் கூட­வில்லை.

குடும்­பங்­க­ளின் நிதி­நிலை அறிக்கை நன்­றாக இருந்­து­வரும் அதே வேளை­யில், பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் பலர் வேலை­களை இழக்­கக்­கூ­டும் என்­றும் அத்­த­கைய சூழ­லில் சொத்­து­க­ளுக்­கான கடன் தவ­ணை­க­ளைச் செலுத்­து­வ­தில் சிர­மங்­களை எதிர்­நோக்­க­லாம் என்­றும் நிதி ஆலோ­ச­கர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

பெரும்­பா­லான குடும்­பங்­களுக்கு வீட்­டுக்கடன் ஒரு பெரிய நிதிச் சுமை­யாக இருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த 1999ஆம் ஆண்­டின் முதல் காலாண்­டி­லி­ருந்து, குடும்­பங்­க­ளின் கடன் பொறுப்­பு­களில் குறைந்­தது 70 விழுக்­கா­டாக இருப்­பது வீட்­டுக்கடன்­தான் என்று புள்­ளி­வி­வ­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், குடும்­பங்­கள் அடுத்த ஈராண்­டிற்­குத் தங்­க­ளது வீட்­டுக்கடன் தவ­ணை­யைச் செலுத்­து­வ­தற்­காக தங்­க­ளது ரொக்­கச் சேமிப்­பு­களில் அல்­லது விற்று ரொக்­க­மாக்­க­க்கூ­டிய சேமிப்­பு­களில் குறிப்­பிட்ட அளவை ஒதுக்கி வைக்­கும்­படி டிபி­எஸ் வங்­கி­யின் வைப்­புத்­தொகை­கள், நிதித் தீர்­வு­கள் பிரி­வின் தலை­வர் பிராண்­டன் லாம் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

குறைந்­தது ஆறு மாதங்­களுக்கு அன்­றா­டச் செல­வு­களைச் சமா­ளிப்­ப­தற்­கான நிதி­யை­யும் குடும்­பங்­கள் வைத்­து இ­ருக்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

நிதிச் சிக்­கலை எதிர்­கொள்­ளும் வீட்டு உரி­மை­யா­ளர்­களுக்கு உதவ நிதி­யு­த­வித் திட்­டங்­களும் உள்­ளன.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தி­டம் கடன் பெற்று, வீவக வீடு வாங்­கி­ய­வர்­கள் ஆறு மாதங்­கள் வரை­யி­லும் தங்­க­ளது கடன் தவ­ணை­யைக் குறைக்­க­லாம் அல்­லது கடன் தவ­ணை­யைச் திருப்­பிச் செலுத்­து­வ­தைத் தள்­ளிப்­போ­ட­லாம்.

தங்­க­ளது நிதி நிலைமை மேம்­ப­டும்­வரை, அந்­தக் கடன் நிலு­வைத் தொகை­யை­யும் குறிப்­பிட்ட காலத்­திற்­கு அவர்கள் தவணை முறை­யில் செலுத்த முடி­யும்.