தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியர்களின் மனதைப் புண்படுத்திய 'நகைச்சுவை'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் பிறந்த நகைச்­சுவைக் கலை­ஞர், நிகழ்ச்சி ஒன்­றின்­போது தெரி­வித்த கருத்­து­கள் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மன­தைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் திரு­வாட்டி ஜோஸ்­லின் சியா (படம்) பேசி­ய­தற்­குப் பலர் கண்­ட­னம் தெரி­வித்துள்ளனர். அவர்­க­ளில் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ண­னும் மலே­சி­யா­வுக்­கான சிங்­கப்பூர் தூதர் வேணு கோபால மேனனும் அடங்­கு­வர்.

அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வில் நகைச்­சுவை நிகழ்ச்சி ஒன்று நடை­பெற்­றது. அதில் சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான போட்­டித்­தன்­மை­யை நையாண்டி செய்யும் வகையில் பேசப்­பட்­டது. நிகழ்ச்­சி­யில் பேசிய திரு­வாட்டி சியா, மாய­மான மலே­சிய ஏர்­லைன்ஸ் விமா­னம் குறித்து பேசி­னார்.

அந்த விமா­னம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து புறப்­பட்டு சீனத் தலை­ந­கர் பெய்­ஜிங் நோக்­கிப் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது மாய­மா­னது.

அதைத் தேட மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி­கள் தோல்­வி­யில் முடிந்­தன. இன்று­வரை அந்த விமா­னத்­தைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. விமா­னத்­தில் பய­ணம் செய்த அனை­வ­ரும் மாண்டு­விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், விமா­னத்­தில் பய­ணம் செய்­த­வர்­க­ளின் குடும்­பத்­தா­ரின் உணர்­வு­க­ளைப் பற்றி சிறி­தும் கவ­லைப்­ப­டா­மல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் வகை­யில் திரு­வாட்டி சியா பேசி­னார். இவற்­றைக் காட்­டும் 89 வினாடி­ காணொளி இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

"ஜோஸ்­லின் சியா­வின் கருத்து­கள் என்னை அதிர்ச்­சி­யில் ஆழ்த்தியுள்ளன. அவ­ரு­டைய இந்­தக் கருத்­து­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­கள் அல்ல. மலே­சி­யா­வில் உள்ள உற­வி­னர்­கள், நண்­பர்­கள் ஆகி­யோருக்கிடை­யிலான உற­வுக்கு சிங்கப்பூரர்கள் மதிப்­ப­ளிப்­ப­வர்­கள். மன­தைப் புண்­ப­டுத்­தும் இந்­தக் கருத்­து­களால் மலே­சி­யர்­கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்­ள­னர். இதற்­காக மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்று வெளி­யுறவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ணன் டுவிட்­ட­ரில் நேற்று பதி­விட்­டார்.

திரு­வாட்டி சியா தற்­போது சிங்­கப்­பூ­ரர் அல்ல என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.