'அரசியலுக்கு அப்பால் சேவையாற்ற முடியும்'

2 mins read

இப்­போது அர­சி­ய­லில் இல்­லா­மல் அர­சி­ய­லைக் கடந்து சேவை­யாற்ற முடி­யும் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அடுத்­து­வ­ரும் அதி­பர் தேர்­த­லில் வேட்­பா­ள­ராக நிற்­கும் முடிவு அவ­ச­ர­மாக எடுக்­கப்­பட்­ட­தில்லை என்­றா­லும் அம்­மு­டிவு கடி­ன­மாக இருந்­த­தாக திரு தர்­மன், தாமான் ஜூரோங் சமூக மன்­றத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று கூறி­னார்.

சந்­திப்­பில் திரு தர்­ம­னு­டன் அவ­ரது மனைவி ஜேன் யுமிக்கோ இட்­டோகி இருந்­தார்.

"கொள்கை வகுப்­பா­ள­ராக இருப்­பது எனக்­குச் சுமு­க­மாக இருப்­ப­தால் இத­னைக் கடி­ன­மான முடிவு என்­றேன். ஆனால் நாம் அடுத்து அடியெடுத்து வைக்கும் காலம் மிக­வும் மாறு­பட்­டது," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் மக்­க­ளி­டையே இருக்­கும் கருத்­து­க­ளி­லும் விருப்­பங்­க­ளி­லும் கூடு­தல் வேறு­பா­டு­கள் இருப்­ப­தைச் சுட்­டிய திரு தர்­மன், சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை பக்குவமடைவதால் அவை எதிர்­பார்க்­கப்­ப­ட­வேண்­டி­யவை என்­றார்.

இவற்றை இந்­நாட்­டின் நான்­காம் தலை­முறை தலை­மைத்­து­வம் மிகச் சிறப்­பா­கக் கையாண்டு சிங்­கப்­பூ­ரின் நம்­பிக்­கை­யைச் சம்­பா­திக்­கும் என்று நம்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

இருந்­த­போ­தும் அனைத்­து­லக அள­வில் நடப்­ப­து­தான் உண்­மை­யில் கவலை அளிப்­ப­தா­கக் கூறிய திரு தர்­மன், தெரிந்த அபா­யங்­களும் தெரி­யாத அபா­யங்­களும் இருப்­ப­தைச் சுட்­டி­னார்.

அடிப்­ப­டை­யில் உல­கச் சூழல் உடைந்த, நிச்­ச­ய­மற்ற சூழ­லில் உள்­ளது.

கிரு­மிப்­ப­ர­வல் மட்­டு­மின்றி பன்­னாட்டு மோதல்­கள், பதற்­றம், சில நேரங்­களில் போர் போன்ற நெருக்­க­டி­கள் உரு­வா­வ­தற்­கான சூழல் நில­வு­வ­தா­கக் கூறி­னார்.

இவற்­றுக்­கெல்­லாம் மத்­தி­யில் சிங்­கப்­பூர் தன்னை விட்­டுக் கொடுக்­கா­மல் நிற்­க­வேண்­டும் எனக் குறிப்­பிட்ட திரு தர்­மன், அவ்­வாறு நின்­றோ­மா­னால் மக்­கள் ஒன்­றாக இருப்­பர், சிங்­கப்­பூ­ரர்­க­ளா­கச் சிறப்­பு­டன் திகழ முடி­யும், சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருப்­பது குறித்த நல்ல உணர்வு நீடிக்­கும் எனக் ­கூ­றி­னார்.

ஜூரோங் குழுத் தொகு­தி­யில் தாம் பதவி வில­கிய பிறகு, மக்­கள் சந்­திப்­பு­க­ளுக்­கான பொறுப்­பு­க­ளைத் திரு ஷோன் ஹுவாங் கவ­னித்­துக்­கொள்­வார் எனத் திரு தர்­மன் குறிப்­பிட்­டார்.

மற்ற பொறுப்­பு­களை ரஹாயு மஹ்­ஸாம், டாக்­டர் டான் வூ மேங், திரு சியே யவ் சுவென் ஆகி­யோர் பகிர்ந்துகொள்வார்கள் எனதிரு தர்­மன் சொன்­னார்.