தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் மனைவிக்குத் தொடர்புள்ள ஆடம்பர கைப்பைகள் ஏலம்

2 mins read
8b1c3e57-838f-4106-a688-274e1fe9285f
-

மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­தம ரான நஜிப் ரசாக்­கின் மனைவி ரோஸ்மா மன்­சூருக்கு தொடர்பு உள்ள நாற்­பது விலை உயர்ந்த கைப்­பை­கள் ஏலம் விடப்படும் என்று மலே­சிய அர­சாங்­கம் அறி ­வித்துள்­ளது.

அவற்­றின் மதிப்பு பல ஆயி­ரம் ரிங்­கிட் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

1எம்­டிபி நிதி முறை­கேடு தொடர்­பில் 2018ல் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் உள்ள பெவி­லி­யன் ரெசி­டென்­சஸ் வீட்டை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது பெட்டி பெட்­டி­யாக விலை­யு­யர்ந்த ஆடம்­பர கைப் பைகள் கைப்­பற்­றப்­பட்­டன. ஏறக்­கு­றைய நாற்­பது பெட்­டி­கள் நிறைய கைப்­பற்­றப்­பட்ட கைப் பைக­ளின் மதிப்பு பல ஆயி­ரக் கணக்கான ரிங்­கிட் என்று மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

இந்த நிலை­யில் அவற்­றில் 40 ஆடம்­பர கைப்­பை­களை ஏலம் விடு­வ­தாக அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­ரத்தை வெளி­யிட்ட மலே­சிய சட்ட அமைச்­சர் அஸா­லினா உது­மான், நாற்­பது விலை­உ­யர்ந்த ஆடம்­பர கைப்­பை­கள் உட்­பட காவல்­துறையும் ஊழல் தடுப்­புப் பிரிவும் கைப்­பற்­றிய பொருள்­களை அர­சாங்­கம் கை ய­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறது என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லிம் லிப் எங் எழுப்­பிய கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்­து­பூர்­வ­மாக அவ்வாறு பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

1எம்­டிபி நிதி முறை­கேடு வழக்­கில் கைப்­பற்­றப்­பட்ட பொருள் களின் மதிப்பு குறித்து லிம் கேள்வி கேட்­டார்.

"நிதி அமைச்­சின்கீழ் சிறப்புக் கணக்­கில் முத­லீடு செய்­யப்­பட்ட 66.96 மில்­லி­யன் ரிங்­கிட் ரொக்­கத்தை காவல்­துறை பறிமுதல் செய்­தது. ஊழல் தடுப்­புப் பிரி­வி­னர் கைப்­பற்­றிய 16.06 மில்­லி­யன் அர­சாங்க வரு­வாய் கணக்­குக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது," என்று அஸா­லினா விளக்­க­ம­ளித்­தார்.

நாற்பது கைப்பைகள் எப்போது ஏலம் விடப்படும் என்பது தெரி விக்கப்படவில்லை.