தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இக்கட்டான நிலையில் ஆயுதப்படையின் பலம் அவசியமானது: வோங்

2 mins read

ஆபத்து நிறைந்த, சிர­ம­மான கால­கட்­டத்­திற்­கேற்ப சிங்­கப்­பூர் தன்னை சரி­செய்­து­கொள்­ளும் வேளை­யில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை வலு­வு­ட­னும் நம்­பிக்­கை­யு­ட­னும் திகழ்­வது அவ­சி­யம் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார். அனைத்­து­லக அரங்­கில் சிங்­கப்­பூ­ரின் குர­லுக்கு வலு சேர்ப்­பது சிங்­கப்­பூர் ஆயு­தப் படையே என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூர் அதன் நலன்­களைக் காக்க உறு­தி­யு­டன் நீடிப்­ப­தி­லும் நாட்டை பாது­காப்­பா­ன­தாக வைத்­தி­ருப்­ப­தி­லும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை முக்­கிய பங்கு வகிக்­கிறது என்­றும் திரு வோங் தெரி­வித்­துள்­ளார்.

ராணுவ அதி­கா­ரி­கள் பதவி ஏற்பு அணி­வ­குப்­பில் நேற்று கலந்து­கொண்டு அவர் உரை­யாற்­றி­னார். ஜூரோங்­கில் உள்ள சாஃப்டி ராணுவப் பயிலகத் தில் இந்­நி­கழ்வு நடை­பெற்­றது.

"உக்­ரேன் மீது ரஷ்யா படை­யெ­டுத்­தி­ருப்­ப­தா­லும் அமெ­ரிக்கா, சீனா இடை­யி­லான உற­வில் பதற்­றம் நில­வு­வ­தா­லும் உல­கம் பெரிய மாற்­றத்­தை­யும் நிச்­ச­ய­மற்ற நிலை­யை­யும் சந்­திக்­கிறது. மற்­றொரு புறம் பயங்­க­ர­வா­தம், வன்­முறை தீவி­ர­வா­தம், இணை­யத் தாக்­கு­தல்­கள் போன்ற அச்­சு­றுத்­தல்­களும் உள்­ளன.

"ஆசி­யாவை எடுத்­துக்­கொண்­டால், தைவா­னி­யப் பிரச்­சி­னை­யும் தென்­சீ­னக் கடல் பிரச்­சி­னை­யும் அதிக ஆபத்­தா­ன­வை­யாக விளங்­கு­கின்­றன. இந்த அம்­சங்­களில் தப்­புக் கணக்­குப் போடு­வ­தற்­கான இடர்ப்­பா­டு­களும் கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன.

"வியட்­நாம் போர் முடி­வுக்கு வந்­ததி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 50 ஆண்டு கால­மாக ஆசியா அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் அனு­ப­வித்து வந்­துள்­ளது. தற்­போது நிலைமை வேறு­ப­டு­வதை எண்­ணிப் பார்க்­கக்­கூட கடி­ன­மாக உள்­ளது.

"நிலைமை எந்த நேரத்­தி­லும் எப்­படி வேண்­டு­மா­னா­லும் தவ­றாக மாற­லாம், மோதல்­கள் உரு­வா­க­லாம் என்­பதை ஐரோப்­பிய அனு­ப­வம் உணர்த்­து­கிறது. ஆசி­யா­வில்­கூட போர் போன்ற சூழல் நிகழ்­வதை நம்­மால் மறுக்க இய­லாது," என்று திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.