தேர்தலில் போட்டியையே நான் விரும்புகிறேன்: தர்மன் அதிபரானால் நடுவராகப் பணி ஆற்றுவேன் என அறிவிப்பு

2 mins read
6ec86c75-6e22-4253-92cf-4a545b377b8b
-

மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், அதி­பர் தேர்­த­லில் போட்டி இருக்­கும் என்­பதே தம் நம்­பிக்கை என்று தெரி­வித்து இருக்­கி­றார்.

வரு­கின்ற அதி­பர் தேர்­தலில் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக திரு தர்­மன் அறி­வித்து இருக்­கி­றார்.

ஜூரோங் டவு­னில் ஆக்­டிவ்­எஸ்ஜி விளை­யாட்டு கிராம தொடக்க நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், முன்பு பயன்­ப­டுத்­திய ஒப்­பீட்­டையே நேற்று மீண்­டும் குறிப்­பிட்­டார்.

அர­சாங்­கத்­தில் இப்­போது தான் ஆற்­றும் பணி காற்­பந்துக் குழு­வில் தற்­காப்பு ஆட்­டக்­காரரைப் போன்ற ஒன்று என்று அவர் வர்­ணித்­தார்.

அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் தான் நடு­வர்போல செயல்­ப­டப்போவ­தா­க­வும் திரு தர்­மன், 66, கூறி­னார்.

"அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டால் நான் அதே அமைச்­ச­ர­வைக் குழு­வில் ஒரு­வ­ராக இருக்­க­மாட்­டேன்," என்று அவர் தெரி­வித்­தார். அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பு­வது ஏன் என்­பதை விளை­யாட்டு ஒப்­பீட்­டைப் பயன்­ப­டுத்தி விளக்­கும்­படி ஊட­கத்­தி­னர் கேட்­ட­னர்.

ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யில் திரு தர்­ம­னு­டன் குழு­வா­கச் சேர்ந்து போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் நிலை இனி என்­ன­வாக இருக்­கும் என்­றும் ஊட­கத்­தி­னர் கேட்­ட­னர். அதற்கு அளித்த பதி­லில் திரு தர்­மன் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

"இது­நாள் வரை நான் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் போன்ற பணி­யையே ஆற்றி வந்­த­தாக நினைக்­கி­றேன். அதி­பர் தேர்­த­லில் வெற்றிபெறும் பட்­சத்­தில் அதே குழு­வில் இருக்­க­மாட்­டேன்," என்­றார் அவர்.

திரு தர்­மன் நேற்று தொடங்­கப்­பட்ட விளை­யாட்டு கிரா­ம உள்­ள­ரங்கில் ஹாக்கி விளை­யா­டி­னார். பல­ரை­யும் சந்­தித்­தார்.

மூத்த அமைச்­சர் பத­வி­யில் இருந்து வில­கிக்­கொண்டு, மக்­கள் செயல் கட்­சி­யில் இருந்­தும் விடை­பெற்று அதி­பர் தேர்­த­லில் நிற்­கப்­போ­வ­தாக திரு தர்­மன் தெரி­வித்­த­தி­லி­ருந்தே பல ஊக செய்­தி­கள் நிலவி வரு­கின்­றன.

திரு தர்­ம­னின் பேரை­யும் புக­ழை­யும் நினைத்த மாத்­திரத்­தி­லேயே அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டா­மல் பல­ரும் வில­கிக்­கொள்­ளக்­கூ­டும் என்று சிலர் ஊகித்து இருக்­கி­றார்­கள்.

இதுபற்றிக் கேட்­ட­போது தேர்­த­லில் போட்­டி­யையே தான் விரும்­பு­வ­தாக திரு தர்­மன் கூறி­னார்.

"என்னைப் பொறுத்­த­வரை போட்டி என்­பது முக்­கி­ய­மா­னது. போட்­டி­யில் இருந்து விலகு­வது என்­னு­டைய அணு­கு­முறையே அல்ல. இதுவே எப்­போ­தும் எனது வழி­யாக இருந்து வந்­தி­ருக்­கிறது," என்­றார் அவர்.

திரு தர்­மன் அர­சி­ய­லில் 22 ஆண்­டு­க­ளாக இருந்து வரு­கிறார். அவர் மசெக உறுப்­பி­ன­ரா­க­வும் பிர­த­மர் லீ சியன் லூங்­கின் அமைச்­ச­ர­வை­யில் உயர்­நிலைத் தலை­வ­ரா­க­வும் பதவி வகித்து வரு­கி­றார்.

அடுத்த மாத­மும் அர­சாங்­கத்­தி­லேயே தொடர்ந்து இருந்து தன்­ பணி­க­ளி­லும் கடமை­களி­லும் ஒரு­மித்த கவ­னம் செலுத்தி வரப்­போ­வ­தாக திரு தர்­மன் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

அதி­பர் தேர்­த­லில் தேர்ந்­தெடுக்­கப்­படும் பட்­சத்­தில், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நலன்­களுக்கு உத­வும் எனில் சில உயர்­நிலைக் குழுக்­களில் தொடர்ந்து இடம்­பெ­றப்­போ­வ­தா­க­வும் திரு தர்மன் குறிப்­பிட்­டார்.

அதி­பர் தேர்­த­லில் போட்டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்து இருக்­கும் முதல் வேட்­பா­ளர் திரு தர்­மன்.

திரு தர்­மன் ஜூரோங் குழுத்­தொ­கு­தி­யில் இருந்து 2001ல் முதன்­மு­த­லாக நாடாளு­மன்­றத்­திற்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். அது முதல் நான்கு முறை அவர் மீண்­டும் தேர்ந்­தெடுக்­கப்­பட்டு இருக்­கி­றார்.