உக்ரேன் அதிபர்: பதிலடித் தாக்குதல் தொடக்கம்

உக்ரேன் அதிபர்: பதிலடித் தாக்குதல் தொடக்கம்

2 mins read
078aa016-b48b-4f2d-8bf3-bd62f9fc8a20
-

உக்ரே­னில் ரஷ்யப் படை­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­கள் நடந்து வருவ­தாக அந்த நாட்­டின் அதிபர் ஸெலென்ஸ்கி தெரி­வித்­தார். கனடா பிர­த­மர் ஜஸ்­டின் டுரு­டோ நேற்று உக்­ரே­னுக்­குத் திடீர் வருகை அளித்­தார்.

காகோவ்கா என்ற பெரிய அணையை உடைத்­து­விட்டு பல இடங்­க­ளி­லும் வெள்­ளம் ஏற்­படுத்தியதற்­காக அவர் ரஷ்­யாவைக் குறை­கூ­றி­னர்.

"உக்­ரே­னில் எதிர் தாக்­கு­தலும் தற்­காப்புத் தாக்­கு­த­லும் நடந்து வரு­கின்­றன. இந்­தக் கட்­டத்­தில் மேற்­கொண்டு எதை­யும் நான் தெரி­விக்க இய­லாது," என்று உக்­ரே­னிய அதி­பர் கனடா பிர­த­ம­ரு­டன் சேர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது தெரி­வித்­தார்.

நீண்ட நாள்­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட உக்­ரே­னின் பதிலடித் தாக்­கு­தல் தோற்­றுப்­போய்­விட்­ட­தாக ரஷ்ய அதி­பர் புட்டின் தெரி­வித்­ததை அடுத்து அதிபர் ஸெலென்ஸ்கி இவ்­வாறு குறிப்பிட்டார்.

உக்­ரே­னின் கிழக்­கி­லும் தெற்­கி­லும் உக்­ரே­னியப் படை­களின் தாக்­கு­தல்­களை முறி­யடித்­து­விட்­ட­தாக ரஷ்யா தெரி­வித்து இருக்­கிறது.

தான் ராணு­வத் தள­ப­தி­களு­டன் அன்­றா­டம் தொடர்பு­கொண்டு வரு­வ­தா­க­வும் ஒவ்­வொ­ரு­வ­ரும் இப்­போது நம்­பிக்கை­யு­டன் இருப்­ப­தா­கவும் கூறிய உக்­ரேன் அதி­பர், இது புட்­டி­னுக்குப் புரிய வேண்­டும் என்­றார்.

தெற்கு உக்­ரே­னில் உள்ள காகோவ்கா அணைக்­கட்டு ரஷ்யக் கட்­டுப்­பாட்­டில் இருக்­கிறது. அந்த அணைக்­கட்டு உடைந்து பல இடங்­க­ளி­லும் வெள்­ளம் ஏற்­பட்­டு­விட்­டது.

ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீட்­டை­விட்டு ஓடி­விட்­ட­னர். பெரிய அள­வில் மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­ட­லாம் என்ற அச்­சம் ஏற்­பட்டு இருக்­கிறது. சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பேர­ழிவு ஏற்­ப­ட­லாம் என்­றும் தெரி­விக்­கப்­படு­கிறது. இதற்கு உக்­ரே­னும் ரஷ்­யா­வும் ஒன்றின் மீது மற்றொன்று குற்­றம் சுமத்தி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அந்த அணைக்­கட்டு உடைந்­த­தற்கு ரஷ்­யா­தான் கார­ணம் என்று கனடியப் பிர­த­மர் கண்­டித்­தார். ரஷ்ய ஆக்­கி­ர­மிப்புப் பகு­தி­களில் உள்ள உக்­ரே­னி­யர்­களுக்கு உதவி செய்ய முன்­வ­ரும்­படி அனைத்­துலக அமைப்­பு­களை உக்­ரே­னிய அதி­பர் வலி­யு­றுத்தினார்.