FF1 கார் எண்ணை RM1.2மி. விலைக்கு வாங்கிய ஜோகூர் சுல்தான்

1 mins read
a2596aec-1422-4431-9dcb-5b6b93160c0d
-

ஜோகூர் சுல்­தான் FF1 என்ற கார் பதிவு எண்ணை ஏலத்­தில் ஆக அதி­கமாக 1.2 மில்­லி­யன் ரிங்கிட் விலைக்கு வாங்கினார்.

மலே­சி­யா­வின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஆண்­டனி லோக் நேற்று சுல்­தா­னி­டம் அதை ஒப்­படைத்­தார். அந்த எண்ணை ஏலத்­தில் சுல்­தான் RM1.2 மில்­லி­யன் விலைக்­குக் கேட்­ட­தாக அமைச்­சர் ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார். வேறு யாரும் அந்த விலைக்கு அதை வாங்க முன்­வ­ர­வில்லை என்­றார் அமைச்­சர்.

மலே­சி­யா­வின் சாலைப் போக்குவரத்­துத் துறை­யின் 77வது ஆண்­டைக் குறிக்­கும் வகை­யில் FF எண் தகடு தொடர் விற்­ப­னைக்கு கொடுக்­கப்­பட்­டது.

இதற்கு ஆத­ரவு அதி­கம். 34,032 பேர் ஏலத்­தில் அதை வாங்க முன்­வந்­த­தாக அமைச்­சர் கூறி­னார்.

ஜோகூர் சுல்­தான் புது­மை­யான கார் எண்­களை வாங்­கு­வதில் விருப்­பம் உள்­ள­வர். ஏற்­கெ­னவே அவர் F1, V1 ஆகிய எண்­களை பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்­கி­றார்.

FF சிறப்பு வாக­னப் பதிவு எண்­களை வாங்க மக்­க­ளி­டயே பெரும் நாட்­டம் நில­வு­கிறது. இதன் மூலம் RM34 மில்­லி­ய­னுக்­கும் அதிக வரு­வாய் கிடைத்­துள்­ள­து­ என்று மே மாதம் அமைச்­சர் கூறி இருந்­தார்.