அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஹார்வி நோர்மன் கடையை சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்திய தொழிலதிபர்

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஹார்வி நோர்மன் கடையை சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்திய தொழிலதிபர்

1 mins read
ef05d8b7-8e96-4cd5-bdd6-62e4b340ea07
ஜார்ஜ் கோ. படம்: பரித்தா ஹரியான் -

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதை தொழிலதிபர் ஜார்ஜ் கோ அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இவர், மின்சாரப் பொருள்கள், படுக்கைகள் உள்ளிட்டவற்றை விற்கும் பிரபலக் கடையான ஹார்வி நோர்மனின் கிளைகளை முதன்முறையாக சிங்கப்பூரில் திறந்தவர்.

63 வயது திரு கோ, சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெறும் ஒசையா இன்டர்நேஷனல் குழுமத்தின் நிர்வாகத் தலைவர்.

இவர், சிங்கப்பூரில் வசித்தபடியே மொரோக்கோவுக்கான தூதராகவும் இருந்திருக்கிறார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.