தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

1 mins read
9c406c1c-9371-4a4d-8a1c-9f31f18911f1
-

மலே­சி­யா­வின் பேராக் மாநி­லத்­தி­ல் காட்டு யானை­கள் பள்­ளிக்குள் புகுந்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளன. மாநிலத் தலை­ந­கர் ஈப்­போ­விலிருந்து 70 கிமீ தொலை­விலுள்ள அந்த தோட்டப் பள்­ளி­யில் ஜூன் 8ஆம் தேதி அதி­காலை 2 மணி அள­வில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்துள்ளது. வகுப்­ப­றை­க­ளின் சன்­னல்­கள், கம்­பி­கள், சமை­ய­லறை ஆகி­ய­வற்றை சேதப்­ப­டுத்­தி­ய­து­டன் பூந்­தொட்­டி­கள், வாழை, தென்னை மரங்­க­ளை­யும் அவை அழித்­துள்­ளன.

ஆறு யானை­கள் பள்ளி வளா­கத்­திற்­குள் நுழைந்­த­தாக மாநி­லத்­தின் வன­வி­லங்கு, தீப­கற்ப மலே­சி­யா­வின் தேசிய பூங்கா இயக்­கு­னர் யூசோஃப் ஷெரீப்பை மேற்­கோள்­காட்டி மலாய் நாளி­தழ், சினார் ஹரி­யான் செய்தி வெளி­யிட்­டது.

இந்­தச் சம்­ப­வத்­தில் எவ­ருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை. யானை­கள் மீண்­டும் காட்­டுக்­குள் விரட்­டப்­பட்­டன. அவை உணவு­தேடி வெளியே வந்­தி­ருக்­க­லாம் என்று திரு யூசோஃப் கூறி­னார்.

இந்த சம்­ப­வத்தை கோலா கங்­சார் உதவி மாவட்ட கல்வி அதி­காரி ரஸ்­ஸிடி ரசிட் தனது ஃபேஸ்புக் பதி­வில் பகிர்ந்­துள்­ளார். இந்த ஆண்டு பள்ளி சம்­பந்­தப்­பட்ட இது­போன்ற சம்­ப­வம் இரண்­டா­வது முறை­யாக நடந்­துள்­ளது என்­றார் அவர்.