இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் அறை கிடைக்காமல் மூன்று மணி நேரத்துக்கு மேல் தவித்தனர். அருகில் உள்ள உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்டு முடித்த அவர்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் உட்கார்ந்தும் படுத்தும் ஓய்வெடுத்தனர். இதுபற்றி தமிழ் முரசு விசாரித்ததில் நூறு பேருக்கு 71 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தாமதமாக பணம் கட்டியதால் அறைகள் வழங்கப்படுவதற்கு மூன்று மணி நேரம் தாமதமானதாகவும் பீச் ரோட்டில் உள்ள ஹோட்டல் டிராவல்டைன் தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், செய்தி: கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூரில் ஹோட்டல் அறை இல்லாமல் தவித்த இந்திய பயணிகள்
1 mins read
-