அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவ, குரல் மோசடி

அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவ, குரல் மோசடி

2 mins read
95ccc7b9-fdb9-4249-8c72-5b4cdef3ce78
-

மோச­டிக்­கா­ரர்­கள் ஏமாற்­று­வ­தற்கு அதி நவீன தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

செயற்கை நுண்­ண­றிவு மூலம் செயல்­படும் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தி போலி உரு­வங்­க­ளை­யும் குரல் பதி­வு­க­ளை­யும் உரு­வாக்கி நண்­பர்­க­ளா­க­வும் உற­வி­னர் களா­க­வும் பேசி, நடித்து மோச­டிக்­கா­ரர்­கள் பணத்­தைப் பறிக்­கின்­ற­னர்.

அதி­கா­ரி­க­ளைப் போலவே அசை­யும் உரு­வங்­களை உரு­வாக்க 'டீப்­ஃபேக்' எனும் தொழில்­நுட்­பத்தை மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­த­லாம் என்று உள்­துறை துணை அமைச்­சர்  ஷுவெ­லிங் நேற்று தெரி­வித்­தார்.

மோச­டி­க­ளுக்கு எதி­ரான வட்­டார மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய அவர், பிர­ப­ல­மா­ன­வர்­க­ளின் குரல் அல்­லது உரு­வத்தை உரு­வாக்கி ஏமாற்­றப்­பட்ட சில வெளி­நாட்­டுச் சம்­ப­வங்­களை சுட்­டிக்­காட்­டி­னார்.

"இத்­த­கைய மிரட்­டல்­களை விழிப்­பு­டன் நாம் கண்­கா­ணித்­தாக வேண்­டும். ஆய்வு நிலை­யங்­கள், சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்­பு­கள், தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் போன்­றோ­ரு­டன் இணைந்து செயல்­பட்டு அவற்றை எதிர்­கொள்­ளும் வழி­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் மோச­டி­கள் அதி­க­ரித்­துள்ள வேளை­யில் அமைச்­ச­ரின் கருத்து வெளி யாகி­யுள்­ளது. இதே கார­ணத்­துக்­காக சீனா போன்ற நாடு­கள் செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பங்­க­ளுக்கு கடி­வா­ளம் போட்டு வரு­கின்­றன.

கடந்த மே மாதம் மங்­கோ­லி­யா­வில் உள்ள ஒரு வட்­டா­ரத்­தில் காணொளி மூலம் நண்­ப­ரைப்போல பேசி ஆள்­மா­றாட்­டம் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­தில் முகத்தை மாற்­றும் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக காவல்­துறை எச்­ச­ரித்­தி­ருந்­தது.

அந்த காணொ­ளி­யில் நண்­ப­ரைப் போல பேசிய உரு­வம் 4.3 மில்­லி­யன் யுவான் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி­யது. இதனை நம்­பிய ஒரு­வர், 4.3 மில்­லி­யன் யுவானை (S$805,000) மோச­டிக்­கா­ரர் களுக்கு அனுப்­பி­யுள்­ளார்.

இது பற்றி தமக்கு எது­வும் தெரி­யாது என்று நண்­பர் கூறிய பிறகே தாம் ஏமாற்றப்­ பட்­டதை அவர் அறிந்­தார்.

செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்­பம் மூலம் குடும்ப உறுப்­பி­னர்­கள் போல பேசும் குரல் பதி­வு­க­ளைத் தயா­ரித்து பணம் பறிக்­கும் சம்­ப­வங்­கள் ஐரோப்­பா­வி­லும் அதி­க­ரித்து வரு­கின்றன. இது, அவ்­வட்­டா­ரத்­தில் பெருங்­க­வ­லை­யாக உருவாகியுள்ளது.