அறுவை சிகிச்சை கட்டண வரம்பு விரிவடைகிறது

2 mins read
97b13742-320f-4265-903f-e553f68a729b
-

சில மருத்துவமனைக் கட்டணங்களுக்கும் புதிய கட்டண வரம்பு

தனி­யார் துறை­யில் அறி­மு­கம் செய்­யப்­பட் அறுவை சிகிச்­சைக்­கான கட்­டண வரம்பை எல்­லா­வி­த­மான அறுவை சிகிச்சை நடை­மு­றை­க­ளுக்­கும் சுகா­தார அமைச்சு விரி­வு­ப­டுத்தி உள்­ளது. சில மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான புதிய வரம்­பை­யும் அது வெளி­யிட்டு உள்­ளது.

கட்­டண வரம்பு விரி­வாக்­கம் நேற்று முதல் நடை­மு­றைக்கு வரு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது. அறுவை சிகிச்­சைக்­கான கட்­டண வழி­காட்­டி­கள் முதன்­மு­றை­யாக கடந்த 2018ஆம் ஆண்டு அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் நடை­பெ­றும் அறுவை சிகிச்­சை­க­ளுக்­கான கட்­ட­ணத்தை மித­மான அள­வில் வைத்­தி­ருக்க அது உத­வி­யது.

மேலும், அதி­க­ரித்து வரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு செல­வு­களைச் சமா­ளிப்­ப­தற்­கான பெரி­ய­தொரு உத்­தி­யின் ஒரு பகு­தி­யா­க­வும் கட்­டண வரம்பு திகழ்ந்­த­தாக அமைச்சு நேற்று கூறி­யது.

குறிப்­பிட்ட அறுவை சிகிச்சை நடை­மு­றை­க­ளுக்கு எவ்­வ­ளவு கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது என்­னும் விவ­ரங்­களை நோயா­ளி­கள், காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் மற்­றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் தெரிந்து­கொள்ள கட்­டண வழி­காட்டி உத­வி­யது.

தற்­போது அந்­தக் கட்­டண வரம்பு பண­வீக்க அதி­க­ரிப்­புக்கு ஏற்ப மாற்றி அமைக்­கப்­பட்டு உள்­ளது.

அறுவை சிகிச்சை நிபு­ணர்­க­ளின் கட்­ட­ணம் தவிர்த்து மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான புதிய வரம்பு, மருத்­து­வக் கட்­ட­ணங்­கள் நியா­ய­மாக உள்­ள­னவா என்­ப­தன் தொடர்­பில் நோயா­ளி­க­ளுக்கு தெளி­வைத் தரும் என அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

தங்­க­ளது வெவ்­வேறு மருத்­து­வக் கட்­ட­ணங்­க­ளி­லும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யைக் கடைப்­பி­டிக்­கு­மாறு மருத்­து­வர்­களும் மருத்­து­வ­ம­னை­களும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும், மருத்­து­வ­ம­னைக் கட்­ட­ணங்­க­ளுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்டு உள்ள வரம்­புக்­குள் தங்­க­ளது கட்­ட­ணத்தை அமைத்­துக்­கொள்ள மருத்­து­வர்­களும் மருத்­து­வ­மனை நடத்­து­நர்­களும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­று­மா­றும் அமைச்சு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

கட்­டண வரம்பு உத்தி நல்ல பல­னைத் தரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்சு, 2018ஆம் ஆண்டு கட்­டண வழி­காட்­டி­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­போது 20 விழுக்­காட்டு மருத்­து­வக் கட்­ட­ணக் குறிப்­பு­கள் வரம்­புக்கு மேல் இருந்­த­தா­க­வும் தற்­போது அது பாதி­யாக, 10 விழுக்­காட்­டுக்­குக் குறைந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­தது.

இடை­நிலை தனி­யார் அறுவை சிகிச்சை நிபு­ண­ரின் கட்­ட­ணம் நிலை­யா­கத் தொட­ரும் வேளை­யில் அதி­கப்­ப­டியான கட்­ட­ணங்­கள் குறைந்து வந்­துள்­ள­தா­க­வும் அது கூறி­யது.

தொடக்­கத்­தில் 200 பொது­வான அறுவை சிகிச்­சை­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யப்­பட்ட கட்­டண வரம்பு தற்­போது அறுவை சிகிச்சை நிபு­ண­ரின் கட்­ட­ணத்­திற்­கும் பொருந்­தும் வகை­யில் விரி­வாக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது. அதன்மூலம் எஞ்சியுள்ள 1,900 நடைமுறைகளும் வரம்பிற்குள் வருகின்றன.