அதிபர் தேர்தல்: குடிமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல்

2 mins read

இன்று முதல் ஜூன் 28 வரை சரிபார்க்கலாம்

நடை­பெற இருக்­கும் அதி­பர் தேர்­த­லில் வாக்­க­ளிக்­கத் தகு­தி­யுள்ள சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பட்­டி­யல் இன்று ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­படும். ஜூன் 1ஆம் தேதி வரை­யில் கணக்­கெடுக்­கப்­பட்ட, தகு­தி­யுள்ள வாக்­கா­ளர்­களை உள்­ள­டக்­கி­யது அந்தப் பட்­டி­யல்.

21 வயதும் அதற்கு மேற்­பட்ட வய­து­ம் உடைய சிங்­கப்­பூர் குடி­மக்­கள் வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெறு­வர். அவர்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் குடி­யி­ருப்பு முக­வரி இருப்­பது அவ­சி­யம். மேலும், நடப்­பில் உள்ள எந்­த­வொரு சட்­டத்­தின்­கீழும் வாக்­க­ளிக்­கத் தகு­தி­யற்­ற­வர் என அறி­விக்­கப்­படா­த­வ­ராக இருப்­ப­தும் அவ­சி­யம்.

வாக்­கா­ளர் பட்­டி­யல் பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­ப­டு­வது குறித்து சிங்­கப்­பூர் தேர்­தல் துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள் இந்­தப் பட்­டி­யலை மின்­னி­லக்க வடி­விலோ நேர­டி­யா­கவோ சரி­பார்த்­துக்­கொள்­ள­லாம் என்று அதில் தேர்­தல் துறை குறிப்­பிட்­டுள்­ளது.

மின்­னி­லக்க வடி­வில் சரி­பார்க்க விரும்­பு­வோர் தேர்­தல் துறை இணை­யத்­த­ளத்­தில் வாக்­கா­ளர் சேவை­கள் என்­னும் பிரி­வில் தங்­க­ளது விருப்­பத்­தைத் தெரி­விக்­க­லாம். கைப்பே­சிக்­கான சிங்­பாஸ் செயலி அல்­லது 'லைஃப்எஸ்ஜி' செயலி வாயி­லா­க தங்­க­ளது விவ­ரங்­களை சரி­பார்த்­துக்­கொள்­ள­லாம்.

அவ்­வாறு செய்ய இய­லா­த­வர்­கள் தங்­க­ளுக்கு அரு­கில் உள்ள சமூக நிலை­யங்­கள் அல்­லது சமூக மன்­றங்­க­ளுக்­குச் சென்றோ 'சர்­விஸ்­எஸ்ஜி' நிலை­யங்­க­ளுக்­குச் சென்றோ வாக்­கா­ளர் பட்­டி­யலை சரி­பார்க்­க­லாம்.

நொவி­னா­வில் உள்ள தேர்­தல் துறை­யின் அலு­வ­ல­கத்­திற்கு நேர­டி­யா­கச் சென்­றும் அதனை சரி­பார்க்­க­லாம். ஆனால், அங்கு செல்ல தேர்­தல் துறை­யின் இணை­யத்­த­ளத்­திலோ 1800-225-5353 என்­னும் தொலை­பேசி வாயி­லா­கவோ முன்­ப­திவு செய்­வது அவ­சி­யம்.

வெளி­நா­டு­களில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் சிங்­கப்­பூ­ர் வெளி­நாட்டுச் சேவை நிலை­யத்­தில் விவ­ரங்­களை சரி­பார்க்­க­லாம். வெளி­நாட்­டுப் பதிவு மையங்­களாக அவை செயல்­படும்.

அடை­யாள அட்­டை­யி­லுள்ள பெயரோ இதர விவ­ரங்­களோ வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் வேறு­பட்டு இருந்­தால் அதற்­கான கோரிக்­கை­யைச் சமர்ப்­பிக்­க­லாம். ஒரு­வர் வசிக்­கும் பகுதி­யி­லுள்ள வாக்கு மையத்­திற்­கான வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்து அவ­ரது பெயரை நீக்க ஆட்­சே­பம் தெரி­விக்­க­லாம்.

கோரிக்கை மற்­றும் ஆட்­சே­பணையை இணை­யம் வாயி­லா­கவோ நேர­டி­யா­கவோ சமர்ப்­பிக்­க­லாம்.

கோரிக்­கை­கள் அடங்­கிய பட்­டி­யல் ஜூலை 12 முதல் ஜூலை 19 வரை சரி­பார்ப்­புக்கு வைக்­கப்­படும். கடந்த தேர்­த­லில் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்டு வாக்­க­ளிக்க இய­லா­மற்­போ­ன­வர்­கள் இம்­முறை அத­னைச் சேர்க்­கு­மாறு கோரிக்கை விடுக்­க­லாம் என்­றும் தேர்­தல் துறை தெரி­வித்துள்­ளது.