மோசடி வழக்கு விவரம்

1 mins read

2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது தமது துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2018ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த மோசடியில் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. விசாரணைக்குத் தடை கோரிய விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.