இணைந்து போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்கா-இந்தியா ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

இணைந்து போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்கா-இந்தியா ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

1 mins read

அமெ­ரிக்­கா­வின் ஜென­ரல் எலக்­டி­ரிக் நிறு­வ­ன­மும் இந்­தி­யா­வின் இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் நிறு­வ­ன­மும் இணைந்து போர் விமா­னங்­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­காக நடந்த பேச்­சு­வார்த்தை இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யி­ருப் பதாக அறி­யப்­ப­டு­கிறது.

இதற்­கான ஒப்­பந்­தம், இம்­மா­த இறு­தி­யில் பிர­த­மர் மோடி அமெ­ரிக்­கா­வுக்­குச் செல்­லும்­போது கையெ­ழுத்­தா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இரு­த­ரப்பு நவீன தொழில்­நுட்­பப்­ ப­ரி­மாற்­றத்­தின் ஒரு பகு­தி­யாக ஜென­ரல் எலக்­டி­ரிக் நிறு­வ­னத்­தின் நவீன 'எஃப்414' இயந்­தி­ரங்­கள் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் போர் விமா­னங்­களில் பொருத்­தப்­படும் என்று தக­வ­ல­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வார முற்­ப­கு­தி­யில் இந்­தி­யா­வுக்கு வரு­கை­ய­ளித்த அமெ­ரிக்க தற்­காப்பு அமைச்­சர் லாயிட் ஆஸ்­டின், ஒப்­பந்­தம் குறித்து இந்­திய அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார். ஆனால் இந்த ஒப்­பந்­தத்தை இந்­தி­யாவோ அல்­லது அமெ­ரிக்­காவோ இது­வரை மறுக்­கவோ ஆமோ­திக்­கவோ இல்லை.

அமெ­ரிக்­கா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே பல பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான இந்த ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னால் பிர­த­மர் மோடிக்கு முக்­கிய வெற்­றி­யாக இது இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.