தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கையில் உலகின் ஆகப் பெரிய சிறுநீரகக் கல் அகற்றம்

2 mins read
e1bfd790-e94f-4b84-8814-058b9ca83c73
-

உல­கின் ஆகப் பெரிய சிறு­நீ­ர­கக் கல்லை 62 வயது முன்­னாள் சார்ஜண்ட் கானிஸ்­டஸ் கூஞ்ச் என்­ப­வ­ரின் சிறு­நீ­ர­கத்­தி­லி­ருந்து இலங்கை ராணுவ மருத்­து­வர்­கள் அகற்­றி­யுள்­ள­னர்.

சரி­யாக 810 கிராம் எடை­யுள்ள அந்­தக் கல்­லின் எடை ஒரு சரா­சரி ஆண் சிறு­நீ­ர­கத்­தின் எடை­யை­விட ஐந்து மடங்கு அதிகம் என்று ராணு­வம் தெரி­வித்­தது.

அக்­கல் 13.37 சென்டிமீட்­டர் நீளம் கொண்­டது. சரா­சரி ஆண் சிறு­நீ­ர­கம் கிட்­டத்­தட்ட 10 செ.மீ முதல் 12 செ.மீ வரை இருக்­கும்.

"உல­கின் ஆகப் பெரிய, கன­மான சிறு­நீ­ர­கக் கல் அகற்­றும் சிகிச்சை ஜூன் 1ஆம் தேதி கொழும்பு ராணுவ மருத்­து­வ­ம­னை­யில் நடந்­தது," என்று ராணுவ அறிக்கை கூறி­யது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் திரு கூஞ்ச் வயிற்று வலி­யால் அவ­திப்­பட்டு வந்­துள்­ளார். வாய்­வழி மருந்­து­கள் அவ­ருக்கு பலன் தர­வில்லை.

"அண்­மை­யில் ஸ்கேன் பரி­சோ­த­னைக்­குப் பிறகு அறுவை சிகிச்சை செய்­யு­மாறு கூறி­னார்," என்று திரு கானிஸ்­டஸ் கூஞ்ச் உள்­ளூர் தொலைக்­காட்­சி­யி­டம் கூறி­னார்.

கின்­னஸ் உலக சாத­னை­யின் படி, 2008ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னில் ஒரு நோயா­ளி­யி­ட­மி­ருந்து அகற்­றப்­பட்ட 620 கிராம் சிறுநீரகக் கல்லே இது­வ­ரை­யில் மிகப் பெரிய கல்­லாக இருந்­தது. அதனை இப்போது இலங்கை நோயா­ளி­யின் கல் முறி­ய­டித்­துள்­ளது.

கின்­னஸ் உலக சாதனை அங்­கீ­க­ரிப்­பைத் தொடர்ந்து அதி­காரி­கள் புதன்­கி­ழமை இதனை அறிவித்­த­னர்.

கொழும்பு ராணுவ மருத்­து­வ­ம­னை­யின் சிறு­நீ­ர­கப் பிரி­வின் தலை­வர் சிறப்பு மருத்­து­வர் லெப்­டி­னன் கேணல் டாக்­டர் குக­தாஸ் சுதர்­சன் தலை­மை­யில் இந்த சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

"நோயா­ளி­யின் உயி­ரைப் பாது­காப்­பதே சவ­லாக இருந்­தது. இந்த கல் இருந்­த­போ­தி­லும் சிறு­நீ­ர­கம் சாதா­ர­ண­மாக செயல்­பட்­டுள்­ளதே இதில் மிக­வும் முக்­கி­ய­மா­னது," என்று டாக்­டர் கே.சுதர்­ஷன் தெரி­வித்­துள்­ளார்.

சிறு­நீ­ர­கத்­தில் ரத்­தம் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­ம்போது தாதுக்­களும் உப்­பு­களும் படி­க­மாக மாறி, கற்­கள் உரு­வா­கின்­றன.

இந்­தக் கல் கடு­மை­யான வலியை ஏற்­ப­டுத்­தும். அது மிகப் பெரி­ய­தாக இருந்­தால் அல்­லது சிக்­கிக்­கொண்­டால் அறுவை சிகிச்சை தேவைப்­படும்.