தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூர் கலவரம்: இந்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ

2 mins read

கல­வ­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட இந்­தி­யா­வின் மணிப்­பூர் மாநி­லத்­தில் இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை இணை­ய­மைச்­சர் ராஜ்­கு­மார் ரஞ்சன் சிங்­கின் வீட்­டிற்கு நேற்று முன்­தி­னம் இரவு வன்­மு­றை­யாளர்­கள் தீவைத்­துள்­ள­னர்.

இத­னால், மாநி­லம் முழு­வ­தும் பதற்­ற­மான சூழல் நில­வு­கிறது.

சம்­ப­வம் நடந்தபோது அமைச்­சர் வீட்­டில் இல்லை.

பாஜக ஆட்சி நடை­பெற்று வரும் மணிப்­பூ­ரில் மைதேயி சமூ­கத்­தி­ன­ருக்­கும் குகி பழங்­கு­டி­யி­ன­ருக்­கும் இடையே மே மாத தொடக்­கம் முதல் நீடித்து வரும் கல­வ­ரத்­தில் இது­வரை 105க்கும் அதிகமானோர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்­தினம் இம்­பா­லில் நெம்­சா­விற்கு சொந்­த­மான வீட்­டிற்கு மர்மக் கும்­பல் தீவைத்து எரித்­தது.

தொடர்ந்து நியூ செக்­கான் பகு­தி­யில் உள்ள வீடு­க­ளை­யும் மற்­றொரு கும்­பல் தீ வைத்து எரித்­தது. அந்தப் பகு­தி­களில் பாது­காப்­புப் படை­யினர் குவிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மாநில தலை­நகர் இம்­பா­லில் உள்ள ரஞ்­சன் சிங்­கின் வீட்­டிற்­கும் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட வன்­மு­றை­யா­ளர்­கள் திரண்டு, வீட்­டின் அனைத்து பக்­கங்­க­ளி­லும் பெட்­ரோல் குண்­டு­களை வீசி­ தாக்­கு­தல் நடத்­தி­னர். தொடர்ந்து வீட்­டிற்குத் தீவைத்து எரித்­த­னர்.

மணிப்­பூ­ரில் பழங்­கு­டி­யி­னர் பட்­டி­ய­லில் மைத்­தேயி இனக்­குழு சேர விரும்­பி­னர். இதற்கு மாநில பாஜக அரசு ஆத­ர­வாக இருந்­தது. அம்­மா­நில உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­வும் இதற்கு ஏது­வா­ன­தாக இருந்­தது. ஆனால் ஏற்­கெனவே பழங்­கு­டி­கள் பட்­டி­ய­லில் இருக்­கும் நாகா, குக்­கி­கள் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இதுவே 40 நாட்­க­ளுக்­கும் மேலாக தொடர்ந்து அம்மாநிலம் வன்­முறைத் தீயில் வெந்து கொண்­டி­ருக்­கக் கார­ணம்.

மணிப்­பூர் வன்­மு­றையை கட்டுப்­ப­டுத்தி அமைதி முயற்­சி­களை மேற்­கொள்­ளா­விட்­டால் ஒட்­டு­மொத்த வட­கி­ழக்கு மாநிலங்­களும் பற்றி எரி­யும் பேரா­பத்து இருக்­கிறது என்­கின்­றன அம்­மா­நி­லங்­களில் இருந்து வெளி­யா­கும் ஊடகச் செய்­தி­கள்.