மோட்டார்சைக்கிள் வாங்க ஆசைப்பட்டார் தஞ்சோங் பகார் விபத்தில் உயிரிழந்த 20 வயது வினோத்குமார்

மோன­லிசா, லாவண்யா வீர­ரா­க­வன்

தஞ்­சோங் பகா­ரில் கட்­ட­டம் இடிந்து விழுந்த சம்­ப­வத்­தில் மர­ண­ம­டைந்த 20 வயது வினோத்­கு­மார் திருப்­ப­தி­யின் உடல் இன்று சொந்த ஊருக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­கிறது.

நேற்று முன்­தி­னம் பகல் 2 மணி­ய­ள­வில் ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்­ட­டம் இடிக்­கப்­பட்ட போது, சரிந்த சுவரில் மாட்டி வினோத்குமார் உயி­ரி­ழந்­தார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் ஏறத்­தாழ 6 மணி­நேர தேட­லுக்கு பின் வினோத்­கு­மா­ரின் உடலை மீட்­ட­னர். இரவு 9.45க்கு அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

10 மீட்­டர் நீள­மும் 3.8 மீட்­டர் உய­ர­மும் உடைய அச்­சு­வர் விழுந்­த­போது, அங்கு பணி­யில் இருந்த அய்க் சன் டெமொலிஷன் அண்ட் இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தில் 20க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

“பொது­மக்­க­ளுக்­கும் வாகனங்­க­ளுக்­கும் கட்­ட­டப்­பணி தொடர்­பாக எச்­ச­ரிக்கை செய்­யும் பாதை வழி­காட்­டி­யாக இருந்த வினோத் இவ்­வி­பத்­தில் சிக்­கிய சூழலை ஊகிக்க முடி­ய­வில்லை,” என்று அழுதார் வினோத்­தின் தாய்­மாமா­வான கார்த்­திக் சாமுடி, 29. அதே நிறு­வ­னத்­தில் ஓட்­டு­ந­ராக பணி­பு­ரி­யும் அவர் சம்­ப­வத்­தின்­போது வேறு இடத்­தில் இருந்­தார்.

நேற்று பிற்பகல் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வினோத்­கு­மா­ரின் உடலைப் பெற வந்­தி­ருந்த அவ­ரது பாட்­டி­யின் இளைய சகோ­த­ர­ரான ராஜ­மாணிக்­கம் திருப்­பதி, 44, தான் வளர்த்த பிள்­ளையை பறி­கொ­டுத்­து­விட்­ட­தாக கண்­ணீர் வடித்­தார்.

வினோத்­கு­மா­ரின் உற­வி­னர்­கள் எட்டுப் பேர் இங்கு கட்­டு­மானத்­து­றை­யில் பணி­பு­ரி­கின்­ற­னர். எல்­லா­ருமே தாங்க முடி­யாத துய­ரத்­தில் நிலை­கு­லைந்­துள்­ள­னர்.

“நில­ந­டுக்­கம் போன்ற பேரிடர்களில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக பலர் உயிர்­பி­ழைத்ததுபோல வினோத்­தும் உயி­ரு­டன் மீட்­கப்­படு­வான் என்றே கடைசிவரை காத்திருந்தோம்,” என்று வினோத்­கு­மா­ரின் உற­வி­ன­ரான 30 வயது சரண்­ராஜ் காம­ராஜ் கலங்­கி­னார்.

தமிழ்­நாட்­டின் திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் நாட்­ட­றம்­பள்ளி கிரா­மத்­தைச் சேர்ந்த வினோத்­கு­மார், அய்க் சன் டெமொ­லி­ஷன் அண்ட் இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தில் பணி­பு­ரிய 2022 செப்­டம்­பர் மாதம் சிங்­கப்­பூர் வந்­தார். 25 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இங்கு பணி­யாற்­றும் திரு ராஜ­மா­ணிக்­கம் ஏறத்­தாழ இரண்­டரை லட்­சம் இந்­திய ரூபாய் கட­ன் வாங்கி அவரை சிங்­கப்­பூருக்கு அழைத்­தி­ருந்­தார். இயந்­தி­ர­வி­யல் பொறி­யி­யல் துறை­யில் பட்­ட­யக்­கல்­வி பெற்ற இவர் ஏழ்­மை­யான குடும்­பத்­தைச் சார்ந்­த­வர். பெற்­றோ­ர் நாட்சம்பள ஊழியர். இவரது 17 வய­து தம்பி ஊரில் பட்­ட­யக்­கல்வி படித்து வரு­கி­றார்.

மாதம் $800 முதல் $900 வரை சம்பாதித்த வினோத்­கு­மார், பணி­யில் சேர்ந்த நாளி­லி­ருந்தே சிக்­க­ன­மாக சேமித்து தனக்­காக திரு ராஜ­மா­ணிக்­கம் வாங்­கிய கட­னில் முக்­கால்­வா­சியை அடைத்­தி­ருந்­தார்.

சிறு வய­தி­லி­ருந்தே மோட்­டார்­சைக்­கிள் மீது அலாதி பிரி­யம் உள்ள வினோத்­கு­மா­ரின் கனவு சொந்த வரு­மா­னத்­தில் உயர்­ரக மோட்­டார்­சைக்­கிள் வாங்க வேண்­டும் என்­பதே. கடனை அடைத்த பிறகு மோட்­டார்­சைக்­கி­ளுக்குப் பணம் சேர்க்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தார் என்­றார் அவ­ரது தாய்­வழி உற­வி­ன­ரான ஜெய்சங்­கர் செல்­வம், 28.

வினோத்­கு­மா­ரின் மர­ணச் செய்­தியை அறிந்து ஏரா­ள­மான கிரா­மத்து மக்­கள் அவ­ரது வீட்­டில் கூடி­யுள்­ள­னர். அவ­ரது நல்­லு­டலை தமி­ழ­கம் எடுத்­துச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அய்க் சன் டெமொலி­ஷன் அண்ட் இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம் செய்­துள்­ளது. திரு ராஜ­மா­ணிக்­க­மும் கார்த்­திக் சாமு­டி­யும் இன்று தமி­ழ­கம் செல்­கின்­ற­னர்.

சம்­ப­வம் குறித்து மனிதவள அமைச்சு விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

 

monolisa@sph.com.sg

lveer@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!