புதிய அம்சங்களுக்கு ஒத்துழைப்பு விரிவாக்கம்

வாஷிங்டனில் அமெரிக்க-சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சிங்­கப்­பூ­ரும் அமெ­ரிக்­கா­வும் இணை­யப் பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம், விண்­வெளித் துறை ஆகிய அம்­சங்­களில் இரு­தரப்பு ஒத்­து­ழைப்பை விரிவு­ப­டுத்­து­வதாக சிங்கப்பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பாலகிருஷ்ணன் கூறி­யுள்­ளார்.

வாஷிங்­ட­னில் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்டனி பிளிங்­கன் உட­னான சந்­திப்­புக்­குப் பிறகு வெள்­ளிக்­கிழமை டாக்­டர் விவியன் இத­னைத் தெரி­வித்­தார்.

டாக்­டர் விவியனு­டன் கூட்டு செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய திரு பிளிங்­கன், இந்தோ-பசி­பிக்­கில் அமெ­ரிக்­கா­வின் ஆக வலு­வான இரு­தரப்பு உற­வில் இந்த ஒத்­து­ழைப்பு வேரூன்றி இருப்­ப­தா­கச் சொன்­னார்.

“சிங்­கப்­பூ­ரில் அந்­நிய நேரடி முத­லீ­டு­க­ளைப் பொறுத்­த­வரை, அமெ­ரிக்க நிறு­வ­னங்­களே மிகப்­பெ­ரிய பங்கு வகிக்­கின்­றன. இந்தோ-பசி­பிக் பொரு­ளி­யல் கட்­ட­மைப்­பின் மூலம் இன்­னும் வேக­மான, நியா­ய­மான முறை­யில் பொரு­ளி­யலை வளர்க்க நாங்­கள் பணி­யாற்றி வரு­கி­றோம்,” என்­றார் அவர்.

அமெ­ரிக்­கா­வுக்கு மிக முக்­கி­ய­மான பாது­காப்­புப் பங்­கா­ளி­யாக சிங்­கப்­பூர் விளங்­கு­வதை திரு பிளிங்­கன் சுட்­டி­னார்.

இரு­நாட்டு பொரு­ளி­யல் உறவு வர்த்­த­கத்­துக்­கும் அப்­பாற்­பட்­டது என்று டாக்­டர் விவியன் கூறி­னார்.

“அமெ­ரிக்­கா­வில் சிங்­கப்­பூ­ரின் முத­லீ­டு­களும் சிங்­கப்­பூ­ருக்கு அமெ­ரிக்க ஏற்­று­ம­தி­களும் அமெ­ரிக்­கா­வில் 250,000க்கும் அதி­க­மான வேலை­வாய்ப்­பு­களை ஏற்­படுத்­தித் தரு­கின்­றன,” என்று அவர் சொன்­னார்.

“எனி­னும், நாங்­கள் இதோடு நிறுத்­தி­வி­ட­வில்லை. புதிய அம்­சங்­களில் நாங்­கள் ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­து­கி­றோம்,” என்­றார் அவர்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வில் அமெ­ரிக்­கா­வின் உத்­தி­பூர்வ ஈடு­பாடு இந்த வட்­டா­ரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்று டாக்­டர் விவியன் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், இந்த வார­ இறுதி­யில் பெய்­ஜிங்­கிற்கு திரு பிளிங்­கன் மேற்­கொள்­ளும் பய­ணத்­தின் முக்­கி­யத்­து­வத்தை டாக்­டர் விவியன் வலி­யு­றுத்­தி­னார்.

“இது அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் மட்­டு­மல்ல, உல­கிற்கே மிக­வும் முக்­கி­ய­மான தரு­ணம். உங்­க­ளுக்கு இடை­யே­யான வேற்­று­மை­க­ளைச் சமா­ளிக்க முடி­யும் என நாங்­கள் நம்­பு­கி­றோம். திறந்த தொடர்­பு­களை அமைத்து, பரஸ்­பர நம்­பிக்­கை­யை­யும் புரிந்­து­ணர்­வை­யும் கட்­டிக்­காப்­பது முக்­கி­யம்,” என்­றார் அவர்.

டாக்­டர் விவியன் வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை அமெ­ரிக்­கா­வுக்கு பணி­நி­மித்­த­மாக பய­ணம் மேற்­கொண்­டு உள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!