தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலை மோசடியில் ஏமாந்த இருவர் கற்றுக்கொண்ட பாடம்

2 mins read
40e8ebe9-3bcc-4e41-8b2f-46ee367f4863
-

சிங்­கப்­பூ­ரில் வேலை கிடைக்­கும் என நினைத்து, திரு கே.விஷ்­ணு­வும் திரு பி.கோபி­யும் மலே­சி­யா­வில் தங்­கள் சொந்த ஊரை­விட்டுப் புறப்­பட்­ட­னர். அப்­போது இவர்­க­ளது கையில் 200 ரிங்­கிட்டுக்­கும் (S$58) குறை­வான பணம் இருந்­தது.

வேலை மோச­டி­யில் தாங்­கள் சிக்­கிக்­கொண்­டோம் என்­பதை அறிந்­த­தும் இவர்­க­ளது கனவு தவி­டு­பொ­டி­யா­னது. இப்­போது ஜோகூர் பாரு­வில் பாது­கா­வ­லர்­களாக இவர்­கள் வேலை செய்­கின்­ற­னர்.

வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்றை சமூக ஊட­கத்­தில் தாமும் தம் நண்­ப­ரும் கண்­ட­தாக திரு விஷ்ணு கூறி­னார். அதில் குறிப்­பி­டப்­பட்டு இருந்த எண்ணில் அவர்­கள் தொடர்­பு­கொண்­ட­னர்.

"தம்மை முக­வர் என்று கூறிக்­கொண்ட ஆட­வர் ஒரு­வர், சிங்­கப்­பூ­ரில் வேலை தேடித் தரு­வதாக எங்­க­ளி­டம் கூறி­னார். சிங்­கப்­பூ­ரின் ஹோட்­டல் துறை­யில் மாதம் $1,700 சம்­ப­ளத்­து­டன் எங்­க­ளுக்­காக வேலை­கள் காத்து இ­ருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

"நேர்­மு­கத் தேர்­வுக்­காக எங்­களை ஜோகூர் பாரு­வுக்கு அவர் வரச் சொன்­னார்," என்று கூறிய திரு விஷ்ணு, ஏப்­ரல் இறு­தி­யில் தங்­கள் சொந்த ஊரை­விட்­டுப் புறப்­பட்­ட­தா­கச் சொன்­னார்.

"நிர்­வா­கக் கட்­ட­ண­மாக 300 ரிங்­கிட் செலுத்­து­மாறு எங்­க­ளிடம் அந்த 'முக­வர்' கேட்­டுக்­கொண்­டார். ஆனால், அவரை நேர­டி­யா­கச் சந்­தித்த பிறகு பணம் செலுத்­து­வ­தாக நான் அவ­ரி­டம் சொன்­னேன்," என்­றார் திரு விஷ்ணு.

திரு விஷ்ணு, 23, நெகிரி செம்­பி­லா­னை­யும் திரு கோபி, 22, சிலாங்­கூ­ரை­யும் சேர்ந்­த­வர்­கள். சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்கித் தரு­வ­தாக அந்த ஆட­வர் உத்­த­ர­வா­தம் அளித்­த­தால், ஜோகூர் பாரு­வுக்கு அவர்­கள் பேருந்தில் பய­ணம் செய்தனர்.

லார்­கின் சென்ட்­ரல் பேருந்து முனை­யத்­துக்கு அவர்­கள் வந்­து­சேர்ந்­த­தும், அந்த 'முக­வரை' தொடர்­பு­கொள்­ளும் முயற்சி தோல்­வி­யில் முடிந்­தது.

"ஒரு கட்­டத்­தில், வேறொ­ரு­வரி­டம் இருந்து நான் கைப்­பேசியை வாங்கி அந்த 'முகவரை' தொடர்­பு­கொண்­டேன். நான்­தான் அழைக்­கி­றேன் என்­பதை அறிந்­த­வு­டன் அவர் அழைப்­பைத் துண்­டித்­து­விட்­டார்," என்­றார் திரு விஷ்ணு.

இதுகுறித்து அவர்கள் இன்னும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.

பணம் இல்­லா­த­தால் பேருந்து முனை­யத்­தின் தாழ்­வா­ரத்­தில் இரு நாள்­கள் தங்­கும் நிலைக்கு இரு­வ­ரும் தள்­ளப்­பட்­ட­னர். மூன்றாம் நாள் அவர்களிடம் சாப்பிடுவதற்கும் பணம் இல்லை.

"நல்ல வேளை­யாக, எங்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய அரசு சார்­பற்ற அமைப்பை நாங்­கள் கண்­ட­றிந்­தோம்," என்­றார் திரு விஷ்ணு.

தவ­று­களில் இருந்து தாங்­கள் கற்­றுக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், சமூக ஊட­கத்­தில் இது­போன்ற விளம்­ப­ரங்­க­ளைக் கண்டால் கவ­னத்­து­டன் இருக்­கும்­படி மற்­ற­வர்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னார்.

வீடு இல்­லா­த­வர்­க­ளுக்கான தற்­கா­லிக வசிப்­பி­டத்­தில் சேர விஷ்ணு, கோபி இருவருக்கும் தமது அமைப்பு உத­வி­ய­தாக 'யாயா­சான் கெபா­ஜி­கான் சூரியா ஜோகூர் பாரு' நிறு­வ­னர் ஜேம்ஸ் ஹோ கூறி­னார்.