ரூ.1க்கு பிரியாணி வாங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் உணவகம் தற்காலிக மூடல்

1 mins read

இந்­தி­யா­வின் தெலுங்­கானா மாநி­லம், கரீம் நகரில் புதிய உண­வ­கத்­தின் திறப்பு விழாவை முன்­னிட்டு, ரூ1.க்கு பிரி­யாணி வழங்­கப்­ப­டு­வ­தாக உண­வக நிர்­வா­கம் விளம்­ப­ரம் செய்து இருந்­தது.

அதைக் கண்ட மக்­கள், சுட்டெ­ரிக்­கும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் நேற்று முன்தினம் உண­வ­கத்­துக்கு வெளியே திரண்டு நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

இது­கு­றித்து சமூக ஊட­கங்­களில் செய்தி பர­வி­ய­தால் நேரம் செல்ல செல்ல கூட்­டம் அதி­க­ரித்­தது. பிரி­யாணி வாங்க வாக­னங்­களில் வந்­த­வர்­கள் வாக­னங்­களை நிறுத்த இடம் இல்­லா­த­தால் சாலை­யி­லேயே அவற்றை நிறுத்­தி­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டது. பிரி­யாணி வழங்க தொடங்­கி­ய­போது ஒரு­வரை ஒரு­வர் முண்­டி­ய­டித்­துச் செல்ல முயன்­ற­னர். அப்­போது அவர்­க­ளுக்கு இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. ஒரு சிலர் ரூ.1 கொடுக்­கா­மலேயே கடைக்­கா­ர­ரி­டம் இருந்து பிரி­யா­ணியை பறித்­துச் சென்­ற­னர்.

நிலைமை கட்­டுக்­க­டங்­கா­மல் போகவே உண­வக உரி­மை­யா­ளர் காவல்­து­றைக்­குத் தக­வல் அளித்­தார். அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­திற்கு வந்து கூட்­டத்­தைக் கட்டுப்­ப­டுத்த முயன்­றும் பலன் இல்லை. இத­னால் அவர்­கள் உண­வ­கத்­தைத் தற்­கா­லி­க­மாக மூடி­னர். இதை­ய­டுத்து வரி­சை­யில் காத்­தி­ருந்­த­வர்­கள் ஏமாற்­றத்­து­டன் கலைந்­துச் சென்­ற­னர்.