விமான இயந்திர உடன்பாடு மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் கிடைக்கும்

இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி நாளை மறு­நாள் அமெ­ரிக்கப் பயணத்­தைத் தொடங்­கு­கி­றார். அந்­தப் பய­ணத்­தின்­போது முக்­கி­ய­மான ஓர் உடன்­பாடு கையெ­ழுத்­தா­கும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் ஜென­ரல் எலக்ட்­ரிக் நிறு­வ­னத்­தின் எஃப்414 போர் விமான இயந்­தி­ரங்­களை இரு நாடு­களும் சேர்ந்து இந்­தி­யா­வில் தயா­ரிக்க அந்த உடன்­பாடு வகை­செய்­யும்.

ஜென­ரல் எலக்ட்­ரிக் நிறு­வ­னத்­திற்­கும் இந்­தி­யா­வின் இந்­துஸ்­தான் ஏரோ­நாட்­டிக்ஸ் லிமி­டெட் நிறு­வ­னத்­திற்­கும் இடை­யில் கையெ­ழுத்­தா­கும் அந்த உடன்­பாட்­டின் மூலம் இந்­தி­யா­விற்கு ஜெட் இயந்­திர தொழில்­நுட்­பங்­கள் அதிக அள­வில் கிடைக்­கும் என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அந்த உடன்­பாடு தொடர்­பில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டது.

“ஜென­ரல் எலக்ட்­ரிக் ஜெட் விமான இயந்­தி­ரங்­க­ளின் மிக முக்­கி­ய­மான அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­கள் அந்த உடன்­பாட்­டின் மூலம் இந்­தி­யா­விற்குக் கிடைக்­கும்.

“அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்­டன் ஆகிய நாடு­கள் இது­வ­ரை­யில் கொடுத்­தி­ராத அள­வுக்கு அமெ­ரிக்க தொழில்­நுட்­பங்­கள் இந்­தி­யா­வுக்குக் கிடைக்­கும்,” என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!