தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிப்பு

1 mins read
நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, சட்டம், போக்குவரத்து துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்கவுள்ளார்
8fb76bbc-b279-4a4f-bf81-e10b0233c78f
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமராகப் பொறுப்பேற்கவிற்கும் லாரன்ஸ் வோங் தமது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

துணைப் பிரதமராக திரு ஹெங் சுவீ கியட் தொடர்வார். புதிய துணைப் பிரதமராக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் பதவி உயர்வு பெறுகிறார். அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் உத்திபூர்வக் குழுவுக்கும் பொறுப்பு வகிப்பார். திரு லாரன்ஸ் வோங் விடுப்பில் இருக்கும்போது தற்காலிகப் பிரதமராகவும் திரு கான் செயல்படுவார்.

பெரும்பாலான அமைச்சரவைப் பொறுப்புகளில் மாற்றம் இல்லை.

திருவாட்டி லோ யென் லிங், திரு டெஸ்மண்ட் டான் இருவரும் பதவி உயர்வு பெற்று மூத்த துணை அமைச்சர்களாகின்றனர்.

இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பொறுப்புகளை ஏற்கின்றனர்.

புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, சட்டம், போக்குவரத்து துணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்கவுள்ளார். அவர் ஜூலை மாதம் 1ஆம் தேதி பதவி ஏற்பார்.

ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் ஹுவாங் கல்வி, நிதி அமைச்சுகளுக்கு மூத்த நாடாளுமன்றச் செயலாளராக மே மாதம் 15ஆம் தேதி பதவி ஏற்கிறார்.

குறிப்புச் சொற்கள்