தாய்லாந்து போர்க்கப்பல் மூழ்கியது; மாயமான 31 கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

தாய்லாந்து போர்க்கப்பல் மூழ்கியது; மாயமான 31 கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

1 mins read
bbda446b-6e63-4dbe-9138-4b56603ee692
தாய்லாந்து வளைகுடாவில் சுற்றுக்காவலில் பணியில் ஈடுபட்டிருந்த போர்க்கப்பல், திடீரென பக்கவாட்டில் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது. படம்: அரச தாய்லாந்து கடற்படை -

தாய்லாந்து வளைகுடாவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போர்க்கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்து கடலில் மூழ்கியது.

இதில் மாயமான 31 கடற்படை வீரர்களைத் தேடி மீட்கும் பணியில் தாய்லாந்து ராணுவ போர்க்கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் திங்கள்கிழமை ஈடுபட்டன.

இந்தச் சம்பவத்தில் 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அரச தாய்லாந்து கடற்படை தெரிவித்தது. எனினும், திங்கள்கிழமை பிற்பகல நிலவரப்படி, 31 கடற்படை வீரர்களை இன்னும் காணவில்லை.

இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா சொன்னார்.

"இந்தச் செய்தியை நான் அணுக்கமாகக் கவனித்து வருகிறேன். சுமார் ஐவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன," என்றார் அவர்.