சிராங்கூன் ரோட்டில் விபத்து; மூவர் காயம்

சிராங்கூன் ரோட்டில் விபத்து; மூவர் காயம்

1 mins read
9ea5cad9-9e2a-444c-9136-050b44fad5f4
சிராங்கூன் ரோடு-லேவண்டர் ஸ்திரீட் சந்திப்பில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து, மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படம்: Telegram/SGRoad Blocks / Traffic News -
multi-img1 of 3

சிராங்கூன் ரோடு-லேவண்டர் ஸ்திரீட் சந்திப்பில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து, மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்பேஸ்பாட்@ஹைவ் விடுதிக்கு முன்பாக நடைபாதையில் 'சில்வர்' நிற டொயோட்டா கார் நின்றிருப்பதையும் லேவண்டர் ஸ்திரீட்டுக்குக் குறுக்கே விளக்குக் கம்பம் ஒன்று விழுந்திருப்பதையும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களும் காணொளிகளும் காட்டின.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே இரு கட்டுமான வாகனங்கள் நின்றிருப்பதும் கட்டுமானப் பணிக்கான உடையில் இருந்த ஆடவர் பலர் அந்த காரின் முன்பக்கமிருந்து தூக்க முயல்வதும் அப்படங்களில் தெரிகிறது.

கீழே விழுந்த விளக்குக் கம்பத்திற்கு அருகே கறுப்பு நிற கார் ஒன்று நின்றிருந்தது. குறைந்தது ஓர் அவசர மருத்துவ வாகனமும் அவ்விடத்தில் காணப்பட்டது.

விபத்து குறித்து பிற்பகல் 2.25 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் மூவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.