உலகிலேயே ஆகக் குறைமாதப் பிரசவத்தில் பிறந்த குழந்தை அதன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது

உலகிலேயே ஆகக் குறைமாதப் பிரசவத்தில் பிறந்த குழந்தை அதன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது

1 mins read

குறைமாதப் பிரசவத்தில் பிறந்தபோது வெறும் அரை கிலோ கிராமுக்கும் குறைவான எடை கொண்டிருந்த ஆண் குழந்தை ஒன்று, இந்த மாதம் அதன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது.

ஆகக் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் உலகச் சாதனையை இது படைத்துள்ளது.

-

ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹச்சின்சன் எனும் பெயர் கொண்ட இந்தக் குழந்தை, குறிக்கப்பட்ட தேதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டது. அது உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அந்த நிலைக்கு அக்குழந்தையின் பெற்றோரைத் தயார்ப்படுத்தினர்.

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம், மினியபொலிஸ் நகரில் பிறந்தது ரிச்சர்ட். அக்குழந்தையின் தாயாருக்கு மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்குப் பிரசவம் பார்க்க நேரிட்டது.

-

ரிச்சர்ட் பிறந்தபோது அதன் எடை வெறும் 337 கிராம். அக்குழந்தையை அதன் பெற்றோரால் அவர்களது உள்ளங்கையில் தூக்க முடிந்தது. அந்த அளவிற்கு குழந்தை சிறியதாக இருந்தது.

மருத்துவமனையில் ஆறு மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் ரிச்சர்ட் வீடு திரும்ப முடிந்தது.

இம்மாதம் 5ஆம் தேதி குழந்தை அதன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது.

குறிப்புச் சொற்கள்
குழந்தை