மலேசியச் சிறுவணிகர்கள் மேம்பாட்டிற்கு 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

மலேசியச் சிறுவணிகர்கள் மேம்பாட்டிற்கு 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

படம்: பெர்னாமா

01 Nov 2026 - 6:54 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் சிறுவணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

தொழில்முனைவர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் ஒருங்கிணைப்பின்கீழ் அந்த நிதி உதவி வழங்கப்படும்.

தேசிய அளவிலான சிறுவணிகர்கள் தினக் கொண்டாட்டத்தின் நிறைவுவிழாவில் நிதி உதவி குறித்து திரு அன்வார் அறிவித்தார்.

“சிறுவணிகர்க்அள் மற்றும் பல்வேறு சங்கங்களின் மாபெரும் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருமானம் ஆண்டுதோறும் சீராக அதிகரிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய இலக்கு,” என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

“பெரும்பாலான சிறுவணிகர்கள் அன்றாட வாழ்க்கைக்கே மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் கடன்பெற நாள் முழுவதும் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது பெருஞ்சுமை என்பதால் அதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றாண்டுகளில் சிறுவணிகர்களின் சராசரி வருமான வளர்ச்சி குறித்த தரவுகளைச் சேகரிக்குமாறு அமைச்சர் ஸ்டீவன் சிம்மைப் பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார். அதன்மூலம் நாட்டின் ஒரு மில்லியன் குடும்பங்கள் பயனடையும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்