கனடாவைச் சீனா உயிருடன் தின்றுவிடும் என எச்சரிக்கை

கனடா மீது 100% வரி: டிரம்ப் எச்சரிக்கை

1 mins read
df7db099-03fb-4b85-8315-dd8929f3ebd7
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கனடிய பிரதமர் மார்க் கார்னி, சீனப் பிரதமர் ஸீ ஜிங்பிங்கைச் சந்திக்கிறார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: சீனாவுடனான வர்த்தக உடன்பாட்டைக் கனடா நிறைவேற்றினால், கனடாவின் மீது 100 விழுக்காட்டு வர்த்தக வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்தார்.

சீனாவுடன் கனடா மேற்கொள்ளும் ஒப்பந்தம், முடிவில் கனடாவுக்கே ஊறு விளைவிக்கும் எனத் திரு டிரம்ப் கூறினார்.

“கனடாவின் வர்த்தகங்கள், சமூகக் கட்டமைப்பு, வாழ்க்கைமுறை என எல்லாவற்றையும் சேர்த்து, அக்கனடாவைச் சீனா உயிருடன் சாப்பிடும்; முழுமையாக விழுங்கிவிடும்,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, சொந்த நாட்டின் தயாரிப்புகளை வாங்கும்படி காணொளி வழியாகக் கேட்டுக்கொண்டார். அதில் அவர் திரு. டிரம்ப்பின் மிரட்டலை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

“வெளிநாட்டு மிரட்டல்கள் தம் நாட்டின் பொருளியலைச் சூழ்ந்துள்ள நிலையில், கனடியர்கள் தங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது கவனம் செலுத்தப்போவதாகத்” திரு கார்னி குறிப்பிட்டார்.

“பிற நாடுகள் செய்பவற்றை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நமக்குச் சிறந்த வாடிக்கையாளர்களாக நாமே இருக்க முடியும்,” என்று திரு கார்னி கூறினார்.

சீனாவுக்கு இம்மாதம் பயணம் மேற்கொண்ட திரு கார்னி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் புதுப்பித்துச் சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையை எட்டினார்.

திரு கார்னியின் சீனப் பயணத்திற்குத் தொடக்கத்தில் திரு. டிரம்ப் ஆதரவு தெரிவித்தார். ஆனால், கிரீன்லாந்தை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளப் போவதாகத் திரு டிரம்ப் கூறியதைக் கனடா விமர்சித்ததை அடுத்து, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்